கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - 18-11-2022 அன்று பயிற்சி - சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - திட்டத்தின் செயல்பாடு கால அட்டவணை (Implementation of Mission Eyarkai Environment Program in Government Schools – Training on 18-11-2022 – Chief Minister Awards to 5 best performing schools and 25 students – Proceedings of Commissioner of School Education - Roll out Plan) ந.க.எண்: 56667/ எம்/ இ2/ 2021, நாள்: 15-11-2022...



>>> அரசுப் பள்ளிகளில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டம் செயல்படுத்துதல் - 18-11-2022 அன்று பயிற்சி - சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - திட்டத்தின் செயல்பாடு கால அட்டவணை (Implementation of Mission Eyarkai Environment Program in Government Schools – Training on 18-11-2022 – Chief Minister Awards to 5 best performing schools and 25 students – Proceedings of Commissioner of School Education - Roll out Plan) ந.க.எண்: 56667/ எம்/ இ2/ 2021, நாள்: 15-11-2022...






அக்டோபர் 28...


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பொள்ளேபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் கல்வியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறந்த பசுமைப்பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர்,சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பருவநிலை மாற்ற இயக்கம் ஈரநிலங்கள் பாதுகாப்பு இயக்கம்,பசுமைத் தமிழ்நாடு, மீண்டும் மஞ்சப்பை போன்ற பல முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


பசுமைப் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான இந்த விருது பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்று அமைச்சர் கூறினார்.


பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில் மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தியா மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த தேவையான செயல்முறைகளை வழங்கும்.

மேலும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது, மேலும் மிஷன் இயற்கை மாணவர்களின் பசுமை பள்ளிகள் மற்றும் சமுதாயம் ஈடுபாட்டின் மூலம் இந்த முன்முயற்சியை வலுப்படுத்த இயற்கை இயக்கம் உதவும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பரிதா டாம்பல்,பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அமுதவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS வலைதளத்தில் மாணவர்களின் Mobile எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?

EMIS வலைதளத்தில் மாணவர்களின் அலைபேசி எண்ணை சரிபார்ப்பது / மாற்றுவது எப்படி?  How to Verify / Change Students Mobile Number in EMIS Website? ...