கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (24-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (24-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 24, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




அஸ்வினி : இழுபறிகள் குறையும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : போட்டிகள் குறையும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 24, 2022



கூட்டு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படுவீர்கள். வாகன பயணங்களின்போது நிதானம் வேண்டும். மற்றவர்களை பற்றி கருத்துக்களை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




கிருத்திகை : நிதானம் வேண்டும். 


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 24, 2022



பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் மேம்படும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் அமையும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 


திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும். 


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 24, 2022



கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.  நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவுபெறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : புரிதல் உண்டாகும். 


பூசம் : நெருக்கடிகள் குறையும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 24, 2022



பணிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த சூட்சுமங்களை அறிவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : காரியசித்தி உண்டாகும்.


பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள். 


உத்திரம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 24, 2022



பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை கூறவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையை பற்றிய கவலைகள் மனதில் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.


அஸ்தம் : கவலைகள் அதிகரிக்கும்.


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 24, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




சித்திரை : காலதாமதமான நாள்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


விசாகம் : இலக்கினை அடைவீர்கள். 

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 24, 2022



தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலருடைய அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : நெருக்கடிகள் குறையும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : சுபமான நாள்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 24, 2022



வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தற்காலிக செயல்பாடுகளில் எண்ணிய தனவரவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : காலதாமதம் குறையும். 


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : அனுபவம் மேம்படும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 24, 2022



அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புத்திரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நண்பர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : இழுபறியான நாள்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும். 


அவிட்டம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 24, 2022



திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். லாபம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும். 


சதயம் : புரிதல் உண்டாகும். 


பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------



மீனம்

டிசம்பர் 24, 2022



திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் நன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் மேம்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.


ரேவதி : பொறுப்புகள் கிடைக்கும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...