கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2023...



இன்றைய (01-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 01, 2023



மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  நிலவும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். இழுபறியான தனவரவுகள் வசூலாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : சிந்தனைகள் மேம்படும்.

 

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 01, 2023



உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனமாக இருக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புகள் குறையும். எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.


ரோகிணி : கவனம் தேவை. 


மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 01, 2023



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். இழுபறியான தனவரவு கிடைக்கும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.

 

புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 01, 2023



வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மனை சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். புரிதல் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.


பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 


ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும். 

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 01, 2023



ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நெருக்கடியான சூழலை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில இடமாற்றம் ஏற்படக்கூடும். சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மகம் : அனுசரித்து செல்லவும். 


பூரம் : இடமாற்றம் நேரிடலாம். 


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் விலகும். 

---------------------------------------




கன்னி

ஜனவரி 01, 2023



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதி குறையும். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கடைபிடிக்கவும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : அமைதி குறையும். 


அஸ்தம் : விமர்சனங்கள் மறையும்.


சித்திரை : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 01, 2023



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை



சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

 

சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : ஒற்றுமை மேம்படும். 

---------------------------------------




விருச்சிகம்

ஜனவரி 01, 2023



உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட  நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : உற்சாகமான நாள்.


அனுஷம் : அனுகூலம் ஏற்படும்.


கேட்டை : புரிதல் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

ஜனவரி 01, 2023



வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் சிறு தடைகளுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அசதிகள் விலகும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




மகரம்

ஜனவரி 01, 2023



பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : சங்கடங்கள் நீங்கும்.

 

அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும். 

---------------------------------------




கும்பம்

ஜனவரி 01, 2023



சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிரடியான சில நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : நட்பு கிடைக்கும். 


சதயம் : முயற்சிகள் ஈடேறும். 


பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 

---------------------------------------





மீனம்

ஜனவரி 01, 2023



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்  உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவு மேம்படும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : வரவுகள் மேம்படும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...