ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என கருதப்படுவதால், மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்தர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில், பார்வையில் காணும் அரசாணை எண் (G.O.No.): 248, நாள்: 22-12-2022 யில் தற்காலிகமாக காலிப்பணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.
மேற்படி அரசாணையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.
பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...