கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ADW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ADW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி - EoI வரவேற்பு



தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - EoI) வரவேற்கப்படுகிறது.


செய்தி வெளியீடு எண்: 647


நாள்: 11.09.2026


தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - Eol) வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 


மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு உதவிகள், கலந்தாய்வு ஆதரவு மற்றும் கல்லூரி சேர்க்கைக்குப் பிந்தைய ஒருங்கிணைப்புப் பணிகளும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக வழங்கப்படவுள்ளன.


இந்த விருப்பக் கோரிக்கையானது (Eol), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.


இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: பரத் (7200738258) /யுரேகா (7373944312) / கார்த்திகேயன் (7338801434).


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



ADW துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு



இன்று 10.06.2026 முதல் நடைபெறவிருந்த ADW துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு - ஆதிதிராவிடர் நல இயக்குனரின் அறிவிப்பு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



 


G.O. (Ms) No. 31 , Dated : 22.05.2026 - ADW துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாறுதல் கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு



ஆதி திராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாறுதல் கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை (நிலை) எண். 31 , நாள் : 22.05.2026 வெளியீடு


G.O. (Ms) No. 31 , Dated : 22.05.2026 - ADW School Teacher's Transfer Counseling Guidelines 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி பள்ளிகள் ஆதிதிராவிடர் நலத் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-2027-ஆம் ஆண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு -கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந-7) துறை


அரசாணை (நிலை) எண். 31 , நாள் : 22.05.2026


பரபாவ வருடம்

வைகாசி மாதம் 08-ஆம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2057


படிக்கப்பட்டது:-


1. அரசாணை (நிலை) எண். 61. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந7) துறை, நாள் 16.05.2025. 

2. ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்களின் கடிதம். 5.5.670. DADW/968/2026-G1, நாள் 13.05.2026.


ஆணை

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2025-2026-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு பணியிட மாறுதல் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியிட மாறுதல் ஆகியன இணையவழி (Online) மூலமாகவும். விடுதிகளில் காப்பாளர்களாக மாறுதல் பெறவிழையும் காப்பாளர்களின் பொதுமாறுதல் நிர்வாக காரணம் கருதி நேரடியாக நடத்திடவும் ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது.


2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர், 2026-2027-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு இணையவழி மூலமாக பொது மாறுதல் கலந்தாய்வு (General Transfer Counselling through Online) நடத்திடவும், இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளது எனவும், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் (online) நடத்திட தனியார் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளி பட்டியல்கள் பெறப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி பட்டியல் பெறப்படும் நிறுவனத்தின் மூலம் 2025-2026-ஆம் ஆண்டிற்கான இணையவழி பொதுமாறுதல் (Online General Transfer Counseling) கலந்தாய்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட மென்பொருளைப் பின்பற்றியே 2026-2027-ற்கான கலந்தாய்வினையும் நடத்திடலாம் எனவும் தெரிவித்து. ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் 10.06.2026, 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய தேதிகளில் நடத்திட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதியும், இப்பணிக்காக தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பயன்பாட்டில் உள்ள சில்லரை செலவினத்திற்கான கணக்குத் தலைப்பின்கீழ் செலவினம் மேற்கொள்ள அனுமதியும் வழங்குமாறு அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


3. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையில், 2028-2027-ஆம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழி மூலம் 10.06.2026, 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய தேதிகளில் நடத்திட ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.


4. மேலும், இக்கலந்தாய்வு பொது மாறுதலின்போது இணைப்பில் உள்ள வழிமுறைகளைப் அறிவுறுத்தப்படுகிறார். பின்பற்றுமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர்


5. 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட, தேவைப்படும் தொகையினை ஆதிதிராவிடர் நல ஆணையரக சில்லரை செலவின கணக்குத் தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.


6. மேலும், மாணக்கரின் கல்வி நலன் பாதிக்காத வண்ணம் பொது கலந்தாய்வு மாறுதல் குறித்த கால அட்டவணையை தயார் செய்து அதன் அடிப்படையில் கலந்தாய்வு பொது மாறுதலை விரைந்து முடிக்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பதவிகளுக்குமான கலந்தாய்வுகள் சென்னையில் ஆதிதிராவிடர் நல ஆணையர் தலைமையில் உள்ள குழுவால் கண்காணிக்கப்பட வேண்டும்.


7. அனைத்துப் பதவிகளுக்குமான பொது மாறுதல்கள் குறித்த கலந்தாய்வுப் பணிகளை விரைந்து முடித்து இதுகுறித்த அறிக்கையினை அரசுக்கு அனுப்பவும் ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார்.


(ஆளுநரின் ஆணைப்படி)


ந. சுப்பையன், 

அரசு செயலாளர்


பெறுநர்

ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை 600 005.

இயக்குநர்.பழங்குடியினர் நலம், சென்னை 600 005.

சம்பளக் கணக்கு அலுவலர் (கிழக்கு). சென்னை 600 008. முதன்மை மாநிலக் கணக்காயர்.


நகல்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை 600 009. 

முதலமைச்சர் அலுவலகம், சென்னை 600 009.

பள்ளிக்கல்வித் துறை, சென்னை 600 009. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலரின் தனிச் செயலர், சென்னை 600 009.

இருப்புக் கோப்பு / உதிரி நகல்.


//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//


பிரிவு அலுவலர் 




ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - ADW ஆணையரின் கடிதம்



Teacher Transfer Counselling - Letter from ADW Commissioner


 ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - ஆத்திராவிடர் நலத்துறை ஆணையரின் கடிதம்


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளது.


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி/ விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளதால், 31.05.2026 அன்றைய நிலையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்படி அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட விபரங்களை சரிபார்த்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் ஒப்புதல் பெற்று 22-05-2026 தேதிக்குள் மின்னஞ்சல் (adw.isection@gmail.com) மற்றும் தபால் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.




விடுதி காப்பாளர்கள், EMIS ID உருவாக்குதல் - ADW ஆணையர் உத்தரவு

 

சமூகநீதி விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், EMIS ID உருவாக்குவதற்கு அருகிலுள்ள ADW பள்ளிகளை தொடர்பு கொள்ள ஆதிதிராவிட நல ஆணையர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



G.O. (Ms) No: 104, Dated : 05-12-2024 - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for 3 years

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 முழு நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 104, நாள் : 05-12-2024 வெளியீடு 


Adi Dravidar and Tribal Welfare - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for three years by Ordinance G.O (Ms) No: 104, Dated : 05-12-2024 Issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


"High Skill Incentive Scheme" to issue Skill Vouchers to SC / ST / Christian SC students in the final year of education who excel in higher education - G.O. Ms. No: 90, Dated : 10-10-2024

 

உயர் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி இறுதி ஆண்டில் பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்க "உயர் திறன் ஊக்கத்திட்டம்" - அரசாணை நிலை எண்: 90, நாள் : 10-10-2024 வெளியீடு



"High Skill Incentive Scheme" to issue Skill Vouchers to SC / ST / Christian SC students in the final year of education who excel in higher education - G.O. Ms. No: 90, Dated : 10-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு (Adi Dravidar Welfare Department - Director's order to send subject-wise provisional seniority list and panel list for promotion of Graduate Teacher, Custodian as on 01.03.2022)...


ஆதிதிராவிடர் நலத்துறை (ADW) - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு (Adi Dravidar Welfare Department - Director's order to send subject-wise provisional seniority list and panel list for promotion of Graduate Teacher, Custodian as on 01.03.2022)...



>>> இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் - மாலை நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடல் - சார்பு - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.எ3/18816/2023, நாள்‌: 28.08.2023 (Teaching Staff - Education - Schools - Evening Special Training Program for Students Studying Class 9 to 12 in Adi Dravidar Welfare High and Higher Secondary Schools in the Academic Year 2023-2024 - Appointment of Special Evening Teachers and Allocation of Funds and Ordering - Regarding - Adi Dravidar Director of Welfare's Proceedings Rc.No.A3/18816/2023, Dated: 28.08.2023)...

 

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் - மாலை நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடல் - சார்பு - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.எ3/18816/2023, நாள்‌: 28.08.2023 (Teaching Staff - Education - Schools - Evening Special Training Program for Students Studying Class 9 to 12 in Adi Dravidar Welfare High and Higher Secondary Schools in the Academic Year 2023-2024 - Appointment of Special Evening Teachers and Allocation of Funds and Ordering - Regarding - Adi Dravidar Director of Welfare's Proceedings Rc.No.A3/18816/2023, Dated: 28.08.2023)...



>>> ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ (SMC) மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...

 

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக - ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...


மின்னஞ்சல்‌:

ஆதிதிராவிடர்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை.5.

முன்னிலை:திரு.த.ஆனந்த்‌, இ.ஆ.ப..


ந.க.எண்‌.ஒ2/13735/2023, நாள்‌. 28.08.2023


பொருள்‌: ஆசிரியர்‌ பணியமைப்பு - கல்வி - பள்ளிகள்‌ - ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில்‌ பள்ளி மேலாண்மைக்குழுவின்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (ப) எண்‌: 198, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்‌(ஆதிந:7)துறை, நாள்‌:14.08.2023.

2. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அரசு கடிதம்‌ (நிலை) எண்‌. 38/-ஆதிந7/2022, நாள்‌: 10.03.2023.


ஆணை:

பார்வை ஒன்றில்‌ காணும்‌ அரசாணையில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ மேல்நிலை / உயர்நிலை , நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ / பதவி உயர்வு மூலம்‌ நிரப்பிடும்‌ வரை அல்லது இக்கல்வியாண்டில்‌ எது முன்னரோ அது வரையில்‌ மாணாக்கர்களின்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ பொதுத்தேர்வு எழுதும்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார்‌ செய்வதற்கு ஏதுவாகவும்‌, ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள்‌ (பணி நிபந்தனைகள்‌) சட்டம்‌ 2016 பிரிவு 19இன்படி முற்றிலும்‌ தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.


பார்வையில்‌ காணும்‌ அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர்‌ நல நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள்‌, (இணைப்பில்‌ தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்‌) பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தற்காலிகமாக ஆசிரியர்‌ பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/.. மாதத்தொகுப்பூதியத்தில்‌ கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.




ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து அரசு செயலரின் கடிதம் நிலை எண்: 78, நாள்: 26-06-2023 (General Transfer Counselling for Teachers and Hostel Wardens working in Adi Dravidar Welfare Department - Government Secretary's Letter SlMs No: 78, Dated: 26-06-2023 regarding issuance of guidelines)...


>>> ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து அரசு செயலரின் கடிதம் நிலை எண்: 78, நாள்: 26-06-2023 (General Transfer Counselling for Teachers and Hostel Wardens working in Adi Dravidar Welfare Department - Government Secretary's Letter SlMs No: 78, Dated: 26-06-2023 regarding issuance of guidelines)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..


முழு நேர ஆய்வுப் பட்டப் படிப்பு (Ph.D.,) பயிலும் 1600 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1,00,000 வீதம் 6 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-23 ஆம் ஆண்டு - விண்ணப்பப் படிவம் மற்றும் திட்ட விதிமுறைகள் - ஆதி திராவிடர் நல இயக்குநரகம் (Incentive scheme for 6 years at the rate of Rs.1,00,000 per annum for 1600 students pursuing full-time research degree (Ph.D.) - 2022-23 - Application form and scheme terms and regulations - Directorate of Adi Dravidar Welfare)...


>>> முழு நேர ஆய்வுப் பட்டப் படிப்பு (Ph.D.,) பயிலும் 1600 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1,00,000 வீதம் 6 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2022-23 ஆம் ஆண்டு - விண்ணப்பப் படிவம் மற்றும் திட்ட விதிமுறைகள் - ஆதி திராவிடர் நல இயக்குநரகம் (Incentive scheme for 6 years at the rate of Rs.1,00,000 per annum for 1600 students pursuing full-time research degree (Ph.D.) - 2022-23 - Application form and scheme terms and regulations - Directorate of Adi Dravidar Welfare)... 







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் 19 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / 80 பட்டதாரி ஆசிரியர் / 366 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: எ3/ 12422/ 2022, நாள்: 05-01-2023 (19 Post Graduate Teacher / 80 Graduate Teacher (B.T.Assistant) / 366 Secondary Grade Teacher Vacancies in High / Higher Secondary / Middle / Elementary Schools running under Adi Dravidar Welfare Department - Guidelines and Vacancy Details of Schools - Adi Dravidar Welfare Director Proceedings No: A3/ 12422/ 2022, Dated: 05-01-2023)...

 

 

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு  ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என கருதப்படுவதால், மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்தர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில், பார்வையில் காணும் அரசாணை எண் (G.O.No.): 248, நாள்: 22-12-2022 யில் தற்காலிகமாக காலிப்பணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.



மேற்படி அரசாணையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.


பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...



>>> ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் 19 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / 80 பட்டதாரி ஆசிரியர் / 366 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: எ3/ 12422/ 2022, நாள்: 05-01-2023 (19 Post Graduate Teacher / 80 Graduate Teacher (B.T.Assistant) / 366 Secondary Grade Teacher Vacancies in High / Higher Secondary / Middle / Elementary Schools running under Adi Dravidar Welfare Department - Guidelines and Vacancy Details of Schools - Adi Dravidar Welfare Director Proceedings No: A3/ 12422/ 2022, Dated: 05-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆதிதிராவிடர் நலத்துறை - 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு எண்: 2037, நாள்: 15-11-2022 (Adi Dravidar Welfare Department - Aspirants for Dr. Ambedkar Award 2022 can apply with full details about themselves - Press Release No: 2037, Date: 15-11-2022)...

 ஆதிதிராவிடர் நலத்துறை - 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு எண்: 2037, நாள்: 15-11-2022 (Adi Dravidar Welfare Department - Aspirants for Dr. Ambedkar Award 2022 can apply with full details about themselves - Press Release No: 2037, Date: 15-11-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




Google meet வழியாக பதவி உயர்வு வழங்க அறிவுரைகள் - பள்ளிகள்/விடுதிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/பட்டதாரி காப்பாளர் நிலையிலான காலி பணியிடங்கள் -பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - ஆதி திராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Instructions for SGT- BT Promotion Online Counseling (through Google meet ) - ADW Department - Graduate Teachers/ Graduate Warden level vacancies in Schools/Hostels -Filling by promotion - Letter from Director of Adi Dravidar Welfare)...

 


>>> Google meet வழியாக பதவி உயர்வு வழங்க அறிவுரைகள் - பள்ளிகள்/விடுதிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/பட்டதாரி  காப்பாளர் நிலையிலான காலி பணியிடங்கள் -பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - ஆதி திராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Instructions for SGT- BT Promotion Online Counseling (through Google meet ) - ADW Department - Graduate Teachers/ Graduate Warden level vacancies in Schools/Hostels -Filling by promotion - Letter from Director of Adi Dravidar Welfare)...




பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் அரசு ஊழியராகப் பணிபுரியும் தாய்/ தந்தையின் ஊதியத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Norms for Non-Caluculation of DA and HRA in income certificate calculation of Government Servant mother/father for Scheduled Castes (SC/ST) students - Letter from Director of Adi Dravidar Welfare) நே.மு.க.எண்: அய்1/ 28791/ 2015, நாள்: 01-03-2016...


அரசுப் பணியில் இருக்கும் எஸ்சி / எஸ்டி பணியாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற வருமானச் சான்று, அரசு அறிவித்த அகவிலைப்படி இல்லாமல் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் வருமானச் சான்று வழங்கும் அரசுக் கடிதம்...


SC / ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். DA, HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான இயக்குநரின் தெளிவுரை கடிதம்



பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் அரசு ஊழியராகப் பணிபுரியும் தாய்/ தந்தையின் ஊதியத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Norms for Non-Caluculation of DA and HRA in income certificate calculation of Government Servant mother/father for Scheduled Castes (SC/ST) students - Letter from Director of Adi Dravidar Welfare) நே.மு.க.எண்: அய்1/ 28791/ 2015, நாள்: 01-03-2016



>>> பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் அரசு ஊழியராகப் பணிபுரியும் தாய்/ தந்தையின் ஊதியத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Norms for Non-Caluculation of DA and HRA in income certificate calculation of Government Servant mother/father for Scheduled Castes (SC/ST) students - Letter from Director of Adi Dravidar Welfare) நே.மு.க.எண்: அய்1/ 28791/ 2015, நாள்: 01-03-2016...



பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை....


நடுவணரசு  திட்டத்தின் கீழ் பார்வை ஆறில் குறிப்பிட்டுள்ள அரசானைப்படி 2012-13 ஆம் ஆண்டு  முதல் வருமான வரம்பு 2.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அரசு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் கீழ் பார்வை மூன்றில் குறிப்பிட்டுள்ள அரசாணைப்படி 2012-13  ஆம் கல்வியாண்டு முதல் வருமானவரம்பு 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 நடுவணரசு  மெட்ரிக் உதவி தொகை திட்டத்தின்  வரைமுறைகளின் படி அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் போது அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகை மூலங்களின் மூலம் அவர்கள் குடும்ப ஆண்டு வருமான கணக்கிடும் பொழுது அத்தகைய கணக்கீட்டின் மூலம் அவர் பெறும் வீட்டு வாடகை எப்படி கணக்கில் கொள்ளாமல் வருமானம் கணக்கிட வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதே போன்று மாநில அரசு ஊழியர்களின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்ட வரைமுறைகளின் படி தமிழக அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகையை மூலங்களின் மூலம் அவர்தம் குடும்ப ஆண்டு வருமானம் கணக்கிடும் பொழுது அவர் பெரும் அகவிலைப்படியை நீக்கி வருமானம் கணக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதன் மூலம் வருமானவரம்பு காரணமாக மைய அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு மாறிய ஆதிதிராவிடர் இனத்தினை சார்ந்த தமிழக அரசு ஊழியரின் பிள்ளை வேறு வருமான மூலங்கள் ஏதும் இல்லாத நிலையில் அரசு ஊழியர் பெறும் அகவிலைப்படி நீக்கி வருமானம் கணக்கிடும் பொழுது மாநில அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும்.



தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி பட்டதாரி காப்பாளர் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி 04.03.2022 க்கு பின்னர் அறிவிக்கப்படுதல் சார்ந்து ஆதிதிராவிடர் நல ஆணையர் கடிதம் (Letter from Adhi Dravidar Welfare Commissioner regarding the notification of Adhi Dravidar & Tribal Welfare School Graduate Warden and Promotion Counselling Date after 04.03.2022 as the Rules of Conduct for Elections are in force)...



>>> தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி பட்டதாரி காப்பாளர் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி 04.03.2022 க்கு பின்னர் அறிவிக்கப்படுதல் சார்ந்து ஆதிதிராவிடர் நல ஆணையர் கடிதம் (Letter from Adhi Dravidar Welfare Commissioner regarding the notification of Adhi Dravidar & Tribal Welfare School Graduate Warden and Promotion Counselling Date after 04.03.2022 as the Rules of Conduct for Elections are in force)...

இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.02.2022 வரை மீண்டும் கலந்தாய்வு - ஆதி திராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் (Re- Counselling for net vacancies occurring after completion of transfer counselling from 06.01.2022 to 10.02.2022 - Proceedings of Adi Dravidar Welfare Commissioner) ந.க.எண்: ஓ1/37368/2021, நாள்: 28-12-2021...



>>> இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.02.2022 வரை மீண்டும் கலந்தாய்வு -  ஆதி திராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் (Re- Counselling for net vacancies occurring after completion of transfer counselling from 06.01.2022 to 10.02.2022 - Proceedings of Adi Dravidar Welfare Commissioner) ந.க.எண்: ஓ1/37368/2021, நாள்: 28-12-2021...

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் Onlineல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் ( General Transfer Counselling in Online for the academic year 2021-2022 for the posts of Higher Secondary School / High School / Middle School / Primary School Headmasters, Post Graduate Teachers, Computer Instructor, Director of Physical Education and Graduate Teacher / Tamil Teacher / Physical Education Teacher / Secondary Grade Teacher / Computer Teacher is to be held online on 28.12.2021 and 29.12.2021. Vacancy details for the above posts)...



>>> 2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் Onlineல் பொது மாறுதல் கலந்தாய்வு ( General Counselling ) 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய இரண்டு நாட்கள் இணைய வழியில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள்... 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்