கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...


>>> பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள்.06.02.2023

பொருள்: பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

-

பார்வை: 1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 19528/எம்/இ1/2022, நாள்.11.06.2022.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 22.08.2022.

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள் 10.01.2023

******

 பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.


2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3)-ல் காணும் செயல்முறைகளின்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...