நவம்பர் மாத சிறார் திரைப்படம் The Song of Sparrows திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Children's Film for November - 'The Song of Sparrows' - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
நவம்பர் மாத சிறார் திரைப்படம் The Song of Sparrows திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Children's Film for November - 'The Song of Sparrows' - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Children's Film for November - 'The Song of Sparrows' - Synopsis - In Tamil
நவம்பர் மாத சிறார் திரைப்படம் - 'தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ்' (அ) 'குருவிகளின் பாடல்' (The Song of Sparrows) - கதை சுருக்கம் - தமிழில்
மாணவர்களுக்கான அக்டோபர் மாத சிறார் திரைப்பட முழு கதை சுருக்கம்
ஈரான் தலைநகரான தெஹ்ரான் நகருக்கு வெளியே உள்ள தீக்கோழிப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருப்பவர் கரீம். அவரது மனைவி நர்கிஸ். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இந்தக் குடும்பம் அவர்களுடைய ஒரு சிறிய வீட்டில் எளிமையான, நிறைவான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது. பாசமும் பண்பும் மிக்கவர் கரீம். ஆனால் குடும்ப பாரம் மற்றும் பொறுப்பு காரணமாக அவ்வப்போது கோபக்காரராக இருக்கிறார்.
மூத்த மகள் ஹனீயே பிறப்பு முதலே காது கேளாதவள். அரசு இலவசமாகக் கொடுத்த காது கேட்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துபவள். ஆனாலும் உதட்டசைவை வைத்து பிறரின் பேச்சைப் புரிந்து கொள்ளப் பழகியவள். ஒரு நாள் அவளுடைய காதுக் கருவி அவர்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மழைநீர்த் தொட்டியில் விழுந்துவிடுகிறது. இதைக் கேள்விப்பட்டு கரீம் கோழிப் பண்ணையில் இருந்து விரைவாக வீடு திரும்புகிறார். கரீமின் மகன் ஹுசைன் அக்கம் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து அக்காவின் காதுக் கருவியை - தூர் வாரப்படாத, சகதியான அந்த நீர்த் தேக்கத் தொட்டியில் தேடிக் கொண்டிருக்கின்றான்.
தொட்டியில் இறங்கியதற்காகக் கரீம் அவர்களைத் திட்டுகிறார். பிறகு தானும் தொட்டியில் இறங்கித் தேடுகிறார். தேடலுக்கு இடையே ஹுசைனும் அவனது நண்பர்களும் 'அந்தத் தொட்டியைத் தூர்வாரி, சுத்தம் செய்து அதில் மீன் வளர்த்து பெரும் பணக்காரர்கள் ஆகலாம்' என்று கூறுகின்றார்கள். கரீம் அந்த யோசனையை நிராகரிக்கிறார். ஒரு வழியாக அவர்கள் காதுக் கருவியைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனாலும் அது சரியாக வேலை செய்யவில்லை. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இலவச மாற்று கருவி கிடைக்க நான்கு மாதங்கள் ஆகும் என்கின்றனர். அவசரமாக வேண்டுமென்றால் தலைநகர் தெஹ்ரான் நகருக்குச் சென்றால் கடைகளில் கிடைக்கும் என்று தெரிய வருகிறது.
உதட்டசைவால் பேச்சைப் புரிந்துகொள்ளும் மகள் ஹனீயே, தன் தந்தையிடம் அதிகம் பணமில்லை எனத் தெரிவதால் 'கருவி இல்லாமலேயே காது ஓரளவு கேட்கிறது' எனப் பொய் சொல்கிறாள். மகளின் நிலையை உணர்ந்து கலங்குகிறார் கரீம்.
அந்தக் கவலையோடே வேலைக்குப் போகிறார் கரீம். வேலை செய்யும் பண்ணைக்குப் புதிய தீக்கோழிகளை இறக்கிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு கோழி தப்பி ஓடிவிடுகிறது. அதற்கு கரீமின் அலட்சியம் தான் காரணம் என்று காரணம் காட்டி அவரை வேலையை விட்டு நீக்குகின்றனர். அதன் பின் ஓரிரு தினங்களில் ஹனீயேவின் கருவியைச் சரி செய்ய விசாரிக்கலாம் என்று தெஹ்ரானுக்குச் செல்கிறார் கரீம். அங்கு கருவியை சரி செய்ய 350000 தோமான்கள் செலவாகும் என்று தெரிய வருகிறது. திரும்பி வரும்போது தெஹ்ரான் கடைத் தெருவில் அவரை 'வாடகைச் சவாரிக்கு மோட்டார் பைக் ஓட்டுபவர்' என்று ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டு பைக்கில் சவாரி ஏறி, அதற்காக பணம் கொடுக்கிறார். அதனால் அவர் மோட்டார் பைக்கில் வாடகைக்கு ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிச் செல்வதையே புதிய தொழிலாக்கிக் கொண்டு தினமும் நகரத்துக்கு வருகிறார்.
அப்போது அவர் சந்திக்கும் மனிதர்களும் நேரும் அனுபவங்களும் அவரது நேர்மையான, பெருந்தன்மையான குணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றன.
நகரத்தில் பணக்காரர்கள் பார்த்தால் பணம் பொருள் எதுவும் கொடுப்பார்கள் என்பதற்காக அவர்களுக்குத் தெரிகிற மாதிரி சாலையில் நின்று தொழுகிறார். பணத்துக்காகப் பொய் கூறுதல், அதிக ஆசை, குறுக்கு வழியில் சிந்திப்பது என அவருடைய நற்குணங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அவரது மனைவி மற்றும் மகளுக்கு வேதனையை அளிக்கின்றன. ஒரு நாள் கூரியர் கம்பெனி காரர்கள் கொடுத்தனுப்பிய ஒரு சிறிய ஃப்ரிட்ஜை திருட்டுத்தனமாக வீட்டுக்கு எடுத்து வந்துவிடுகிறார். நாளுக்கு நாள் பேராசை பெருக, நகரத்தில் தெருவிலும் குப்பைத் தொட்டியிலும் கிடக்கும் சில பொருட்களை பைக்கில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்து சேர்த்து வைக்கிறார். பழைய கதவு, பழைய மின் சாதனப் பொருட்கள் போன்றவற்றை கிராமத்தில் குறைந்த விலைக்கு விற்கிறார். மகளின் காதுக் கருவியைப் பற்றி மறந்தும் போகிறார். இந்நிலையில் அவருடைய உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர்.
ஒரு நாள் வீட்டில் விற்பனைக்காகக் குவித்து வைத்திருக்கும் பழைய பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது அவை சரிந்து விழுந்து அவர் மேல் விழுந்துவிட கால் முறிந்து, வேறு சில காயங்களும் ஏற்படுகின்றன. இதனால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாமல் போகவே, அவரது பத்து வயது மகன் ஹுசைன் வேலைக்குப் போகத் துவங்குகிறான். வேலை பார்த்துக் கொண்டே ஹுசைன் தன் தன் நண்பர்களுடன் சேர்ந்து முன்னர் யோசித்து வைத்திருந்தது போல மீன் குஞ்சுககளை வாங்கி அந்தத் தொட்டியை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கின்றனர். பூச்செடிகளையும் வளர்க்கின்றனர். வளர்ந்த மீன்களையும் பூந்தொட்டிகளையும் நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர் சிறுவர்கள். கால் உடைந்த கரீமும் அவர்களுடன் செல்கிறார். ஒரு நாள் ஒரு பண்ணைக்குச் செடிகளை வழங்கச் செல்லும்போது அவர்கள் மீன் குஞ்சுகள் வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பீப்பாய் ஒழுகத் தொடங்குகிறது. அதில் மீண்டும் நீர் நிறப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் அந்த பீப்பாய் உடைந்து மீன்கள் தரையில் சிந்துகின்றன. அவற்றை அப்படியே இறந்து போக விட்டுவிடாமல் ஹுசைன் அவற்றை அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டத்தில் தள்ளி விடுகின்றான். கரீம் இதனைக் கண்டு தன் மகன் மீது பெருமை கொள்கிறார். மீன்களை இழந்த ஹுசைனும் அவனுடைய நண்பர்களும் கவலையாக இருப்பதைக் கண்டு அவர்களின் மனதை மாற்ற பாடல் பாடுகிறார் கரீம். "உலகம் நிலையானதல்ல... உள்ளதை வைத்து மகிழ்ச்சியாக இரு" என்ற பொருளில் அமைகிறது அந்தப் பாடல்.
இறுதிக் காட்சியாக - கரீமின் உடல்நலம் சரியாகிக் கொண்டிருக்கும் போது அவருடன் முன்பு வேலை செய்த நண்பர் ஒருவர், பண்ணையில் தொலைந்து போன தீக்கோழி திரும்ப வந்துவிட்டது என்று கூறுகின்றார். அடுத்த காட்சியில் கரீம் பண்ணையில் அந்தத் தீக்கோழியை கண்ணீர் மல்கக் காண்கிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.
பல அடையாளங்களால் பல கருத்துக்களை உணர்த்துகிறார் இயக்குநர். கவனக் குறைவால் காணாமல் போன தீக்கோழி மனம் திரும்பும்போது திரும்பி வருகிறது என்பதன் மூலம் 'கவனச் சிதறலால் காணாமல் போகும் நல்ல குணங்கள் மனம் வருந்தும்போது திரும்ப வந்துவிடுகின்றன' என்பது அவ்வகை அடையாளக் கருத்துகளில் ஒன்றாகும் எனக் கொள்ளலாம்.
𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்
மாற்றங்கள் மலர்ந்தே தீரும்
* அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதிப்பெண் குறைந்து போனதற்காக 10 வயது மாணவன் ஒருவன் மனமுடைந்து அழுகிறான்.அவனைச் சமாதானப்படுத்தப் பார்க்கிறார் ஆசிரியர். இயலவில்லை. தலைமை ஆசிரியர் வந்து பேசுகிறார். அப்படியும் பையனை சமாதானப்படுத்த முடியவில்லை. அதைப் பார்த்து தலைமையாசிரியர் வருந்தமடைகிறார். அம்மாணவனின் பெற்றோரிடம் பேசிப் பார்க்கிறார். ஆனால் பயனில்லை.
* பள்ளி நிர்வாகமும் பெற்றோரை மகிழ்விக்கவே பார்க்கிறது.
* இன்றைக்குப் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகள் அனைத்தையும் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிலும் தங்கள் பிள்ளை மட்டுமே சிறந்தரவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், குழந்தைகளைத் தங்கள் விருப்பப்படி ஆட்டுவிக்கிறார்கள். தங்கக் கூண்டில் வளர்க்கப்படும் சர்க்கஸ் விலங்கைப் போல பிள்ளைகள் வளர்கிறார்கள். இதனால் அத்தகைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளும், பெற்றோரின் ஆசை மரங்களை உலுக்கிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொள்கிறார்கள்.
* குழந்தைகள் மீதான அழுத்தங்களை எவ்வளவு காலம் தான் பொறுப்பது? தலைமையாசிரியர் லூ வாய் ஹங் வருத்தம் அடைகிறார். தனது வேலையை ராஜினாமா செய்கிறார்.லூ வீட்டிலிருக்கும் போது ஒரு செய்தியைப் பார்க்கிறார். ஒரு கிராமத்தில் இருக்கும் மழலையர் பள்ளியைப் பற்றிய செய்தி அது.
* யுவென் லாங் என்ற கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பழமையானது. மூன்று வகுப்புகளையும் சேர்த்து ஐந்து குழந்தைகளே படிக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் ஒரு குழந்தை தேர்ச்சி பெற்று வேறு பள்ளிக்குப் போய்விடும். விதிமுறைகளின்படி ஐந்து பேருக்குக் குறைவாக இருந்தால் பள்ளியை மூட வேண்டும். கிராம சபையால் 4500 ஹாங்காங் டாலர் மட்டுமே மாதச் சம்பளம் தர முடியும். ஆகவே அங்கு ஆசிரியரும் இல்லை. அந்தப் பள்ளியை இப்போதே மூடிவிட்டால் என்ன?
* செய்தியைப் பார்த்ததும் லூ வருத்தமடைகிறார். மறுநாள் அந்தக் கிராமத்திற்குச் செல்கிறார். பள்ளியைப் பற்றிய செய்தி சமூக ஊடகங்களிலும் பரவியதால் பள்ளியை மூடிவிடுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள்.லூ அவர்களோடு பேசுகிறார். கிராமத் தலைவரைப் பார்க்கிறார்."மிக மிகக் குறைவான சம்பளம் என்றாலும் ஆசிரியராகப் பணியாற்ற விருப்பமாக இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
* ஆசிரியர் கிடைத்துவிட்டதால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி."ஐந்து குழந்தைகளுக்கு மூன்று வகுப்புப் பாடங்களை எப்படி நடத்த முடியும்? எப்படியும் பள்ளியை மூடிவிடலாம்" என்று ஊரார் சிலர் பேசுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு முழுமையான ஈடுபாட்டோடு லூ கற்பிக்கிறார். வயதிற்கேற்ற செயல்பாடுகள் வாயிலாகக் குழந்தைகள் கற்கிறார்கள். கற்றல் கொண்டாட்டமாக ஆகின்றது.
* லூ குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்கிறார். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் பெற்றோர்களிடம் பேசுகிறார். இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில் கவனம் செலுத்துகிறார். பெற்றோரின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறார். பெற்றோருக்கும் பள்ளிக்கும் உள்ள பிணைப்பு வலுவாகிறது.
* ஆசிரியர், பெற்றோரின் முயற்சியால் புதிய கல்வியாண்டில் இரண்டு குழந்தைகள் பள்ளியில் சேருகிறார்கள். ஆறு குழந்தைகள் படிப்பதால் பள்ளி காப்பாற்றப்படுகிறது.
* ஹாங்காங்கைச் சார்ந்த கிராமப் பள்ளியைப் பற்றிய உண்மைக் கதையே '𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' என்ற திரைப்படமாக 2015ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து இப்பள்ளி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்போது 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு படம் நிறைவடைகிறது.
* குழந்தை நேயமான ஆசிரியர்களும் சமூகமும் இணையும்போது மாற்றங்கள் மலர்ந்தே தீரும்.
* 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫' திரைப்படத்தை https://youtu.be/3w2Pgtn_OIM?si=aZO0dPM96yihakcy யூடியுப் தளத்தில் காணலாம்.
தமிழ் கதை விளக்கம்
https://youtu.be/uq5drEsjKtA?si=C7a3xtdj1TeDk3Kj
* 𝐓𝐡𝐢𝐬 𝐀𝐫𝐭𝐢𝐜𝐥𝐞 𝐢𝐬 𝐨𝐛𝐭𝐚𝐢𝐧𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 *கனவு ஆசிரியர்* ஆசிரியர்களுக்கான மாத இதழ்.
* தமிழ்நாடு அரசு, *பள்ளிக் கல்வித் துறை*
ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம் "Where is the Friend's House?" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள், செயல்முறைகள் வெளியீடு
Issuance of guidelines and Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "Where is the Friend's House?" for the month of July.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஜூலை மாதத்திற்கான சிறார் திரைப்படம்
"Where is the Friend's House?"
Movie Link
👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
ஜூன் 2026 மாத குழந்தைகள் திரைப்படம்
Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "The Little Princess" for the month of June.
ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்
படம் வெளியான ஆண்டு: 1935
இயக்கம்: Mr. Walter Lang
The Little Princess- தி லிட்டில் பிரின்ஸஸ்
இந்தக் கதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை பின்னணியாகக் கொண்டது. சாரா கிரூவ் என்ற சிறுமி, தனது தந்தை கேப்டன் ரெஜினால்ட் கிரூவுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இந்தியாவில் பணியாற்றுகிறார். அன்பும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த சாரா, புத்திசாலித்தனம், கற்பனைத் திறன். கருணை போன்ற நற்குணங்களைக் கொண்டவள்.
சாராவின் தந்தை இரண்டாம் ஆங்கிலோ-போயர் போரில் பங்கேற்கத் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். சாரா, இங்கிலாந்தில் இருக்கும் மிஸ் மின்சின் நடத்தும் விடுதிப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.
போரின் போது, சாராவின் தந்தை இறந்துவிட்டார், அவருக்குச் சொத்துகள் ஏதும் இல்லை என்றும் செய்தி வருகிறது. பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டிருந்த சாராவைப் பணிப்பெண்ணாக ஆக்குகிறார்கள்.
அவமானங்கள், தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டாலும், சாரா தனது அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, மன உறுதி ஆகியவற்றை இழக்காமல் வாழ்கிறாள். தனது தந்தை உயிருடன் இருப்பதாக நம்பிக்கை கொள்கிறாள்.
சாராவின் நம்பிக்கை எவ்வாறு அனைவரின் மனதையும் மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதை.
இந்தத் திரைப்படம் மாணவர்களிடம் அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, சமத்துவம் போன்ற மதிப்புகளை வளர்க்க உதவும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக அமைகிறது.
ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess"..
Movie Link
👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் அயலி - பாகம் 2 திரையிடுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Screening of February's Children's Film Ayali - Part 2 - Proceedings of the Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஜனவரி மாத சிறார் திரைப்படம் அயலி தரவிறக்கம் செய்வதற்கான வலைதள முகவரி இணைப்பு
Website link to download January's children's movie Ayali
👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
📽️ ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடுவதற்க்கான வழிமுறைகள்:
▪️ பள்ளி EMIS உள்ளீட்டு தளத்தில், Clubs Option-இல் உள்ள Children Film பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
🔎 Movie Link
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
OR
🖇️ EMIS Website Link:
https://emis.tnschools.gov.in/dashboard
🪜 EMIS -> School Login -> School -> Clubs -> Children Film
▪️ Download செய்தும் காண்பிக்கலாம். அப்படியே Play செய்தும் காண்பிக்கலாம்.
நன்றி!
>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...
குரங்கு பெடல் - அக்டோபர் மாதம் சிறார் திரைப்படம் - தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை
Kurangu Pedal - October 2025 Month Children's Film - Tamilnadu Government School Education Department
>>> காணொளியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
குரங்கு பெடல் திரைப்படத்தின் சிறப்புகள் : இயக்குநர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் பேட்டி
Highlights of the movie Kurangu Pedal: Interview with Director Mr. Kamalakannan
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - "குரங்கு பெடல்" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்
Proceedings of the Director of School Education regarding the screening of the October 2025 Children's Film - "Kurangu Pedal"
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
📽️ ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு
August 2025 Month Children Film " The White Balloon " திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான Youtube இணைப்பு
https://drive.google.com/drive/folders/1va4Jv1-2pCi1W8L3ZPukS35OjJmYUv1G
அன்புடன்.,
பெ. அலெக்ஸ் பாண்டியன்,
BRTE, BRC - சேடபட்டி,
99433 311042
>>> The White Balloon திரைப்படம் காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> The White Balloon திரைப்படம் கதைச் சுருக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> The White Balloon திரைப்படம் தமிழ் விளக்கம் காணொளியை காண இங்கே சொடுக்கவும்
ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் The White Balloon திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Screening of the August children's film "The White Balloon" - DSE Proceedings
பள்ளிகளில் 2025 ஆகஸ்ட் மாதம் திரையிடப்பட வேண்டிய சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து வழிகாட்டுதல்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
July month Movie Screening report 2025-2026
Ma'm/ Sir,
This year our children are back with their *TOP 10* micro movies.
*Details:*
*The movie link:* *TOP 10* are live on HMs & Teacher's EMIS module
*Download:* Please download & play the movie in *FULL SCREEN* mode
🚨 Please Do not play the movie on *Mobile phone* as it will take away important detailing in the movie.
Thank you.
*Links:*
*July month Movie Screening report 25-26* 🔗
https://forms.gle/M2pZy9n6arNJYcwm7
*Movie screening report for viewing* 🔗
https://docs.google.com/spreadsheets/d/1b_DdlWPFi-MKhvtmkglD1WqNiVagbBWgMkeuZFZ-sSo/edit?usp=sharing
ஜூலை 2025 மாதம் குழந்தைகள் திரைப்படம் டாப் 10 : தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு
July 2025 month Children Movie TOP 10 : Tamilnadu School Education Department Released
July 2025 month Children Movie TOP 10
இயக்கம்: 6-9 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்கள்
வெளியான ஆண்டு: 2024-25
மொழி: தமிழ்
திரைப்படத்தின் காலம்: 45 நிமிடங்கள்
>>> YouTubeல் திரைப்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஜனவரி 2025 மாத சிறார் திரைப்படம் A Dream of Trees (மரங்களின் கனவு) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
January 2025 Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
"A Dream of Trees" Children Film Screening - January 2025 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 08-01-2025 & Synopsis
பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "A Dream of Trees (மரங்களின் கனவு)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - ஜனவரி 2025 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 08-01-2025 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "A Dream of Trees" Juvenile Film Screening - January 2025 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 08-01-2025 & Synopsis)...
ஜனவரி மாதம் சிறார் திரைப்படம் "மரங்களின் கனவு" Movie link
👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
டிசம்பர் மாத சிறார் திரைப்படம் BENO ZEPHINE (பெனோ) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
December Movie Screening Circular 2024-25 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
"Beno Zephine" Children Film Screening - December 2024 - Issuance of Guidelines - DSE Proceedings Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis
பள்ளிக்கல்வி - கல்விசாரா மன்ற செயல்பாடுகள் - "பெனோ (Beno)" சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் 2024 - அரசு நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு திரையிடுதல் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34785/எம்/ இ1 /2023, நாள்: 02-12-2024 & கதைச்சுருக்கம் (School Education - Non-Scholastic Forum Activities - "Beno Zephine" Children Film Screening - December 2024 - Screening for Class 6 to 9th students studying in Government Middle / High and Higher Secondary Schools - Issuance of Guidelines Subject to Proceedings of Tamil Nadu Director of School Education Rc.No: 34785/M/E1/2023 , Date: 02-12-2024 & Synopsis)...
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் - பின்பற்ற வேண்டிவை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Screening of Children's Film (TOP 10) in November - Proceedings of Director of School Education
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie download link
👇👇👇
https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard
புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010 ஒரு தொழிலா...