கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...



 பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு : பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Allocation of Rs. 1 crore to provide 'snacks' to school students in the evening: announcement in the Greater Chennai Corporation Budget)...


சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். 


சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.


சென்னை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.


முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறு தீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ஆம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் ஏப்ரல் மாதம் வரை மாலையில் சிறுதீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 இலட்சம் செலவில் வழங்கப்படும்.


3 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 139 பள்ளிகளுக்கு 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இப்பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள NULM திட்ட பணியாளர்கள் மூலம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


சென்னையில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.


பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-24:


10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில்,கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (எ.கா: ஐஐடி-மெட்ராஸ்,ஐஐஎம்-பெங்களூர்,டெல்லி பல்கலைக்கழகம்)  அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.


10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்வு.


சென்னையில் பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்....


மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூபாய் 35 லட்சத்திலிருந்து ரூபாய் 40 லட்சமாக அதிகரிக்கப்படும்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns