கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் (India wins 2 gold medals at World Women's Boxing Championships)...



 உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம் - 81 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி அசத்தினார் ஸ்வீட்டி போரா (India's 2nd gold at World Women's Boxing Championship - Sweety Bora stunned China's Wang Lina in 81kg category)...


13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 81 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.


இதில், இந்தியாவின் ஸ்வீட்டி போரா சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை லீனானை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.




81 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்வீட்டி போராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


முன்னதாக ஏற்கனவே நடந்த 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் லுட்சாய்கானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் நிது கங்காஸ். 


அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 22 வயதாகும் நிது கங்காஸ் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீராங்கனையை முதல் செட்டில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. இரண்டாவது செட்டில் ஓரளவு தாக்குப் பிடித்த மங்கோலிய வீராங்கனை 3-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.


மகளிருக்கான குத்துச் சண்டை உலக சாம்பியன் தொடர் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நிது கங்காஸ் மற்றும் மங்கோலியாவின் லுட்சாய் கான் ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை ஆதிக்கம் செலுத்தி வந்தார். நுணுக்கமான நகர்வுகளால் லுட்சாய்கானை திணறடித்த நிது கங்காஸ், அதிரடியான பஞ்ச்சுகளால் பாயின்ட்டுகளை எடுத்தார். முதல் சுற்றில் அவர் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோதே அவரது வெற்றி உறுதிசெய்யப்பட்டிருந்தது.


நிது கங்காசுடன் சேர்த்து இந்திய வீராங்கனைகள் மொத்தம் 11 முறை மகளிர் குத்துச் சண்டை பிவில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். 2002, 2005, 2008, 2010, 2018 ஆகிய ஆண்டுகளில் 5 முறை மேரி கோமும், 2006-இல் சரிதா தேவி, 2006 மற்றொரு உலக சாம்பியன் தொடரில் ஜென்னி ஆர்.எல்., லேகா கே.சி, 2022 இல் நிகாத் ஸரீன் ஆகியோர் குத்துச் சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...