கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருநாள் மாவட்ட ஆட்சியரானார் அரசுப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா (Aishwarya, a Government School student, became One day District Collector)...

 


ஒருநாள் மாவட்ட ஆட்சியரானார் அரசுப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா (Aishwarya, a Government School student, became One day District Collector)...


புதுச்சேரியில் ஒருநாள் மாவட்ட ஆட்சியரான அரசுப்பள்ளி பிளஸ்-1 மாணவி, தொடர்ந்து மக்கள் பணி செய்ய விருப்புவதாக தெரிவித்தார்.


ஒருநாள் மாவட்ட ஆட்சியர் 


பள்ளி மாணவர்களிடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மக்கள் பணி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு என பதவிகளை ஒருநாள் கொடுத்து செயல்பட செய்யும் நிகழ்ச்சி புதுவையில் அவ்வப்போது நடத்தப்படுகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.சி.சி. மாணவி ஒருவருக்கு போலீஸ் சூப்பிரண்டாக ஒருநாள் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு ஒருநாள் கலெக்டர் பணி வழங்கப்பட்டது.


மாணவி ஐஸ்வர்யா


புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி ஐஸ்வர்யா இன்று ஒருநாள் கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், கலெக்டரின் இருக்கையில் அமரவைத்து, பணி குறித்து விளக்கம் அளித்தார்.


குறிப்பாக கலெக்டருக்கு வரும் கோப்புகள், புகார்களை கையாளுவது, பொதுமக்களை அணுகுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் கலெக்டர் மணிகண்டனுடன் சென்று நகரப்பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.


சட்டசபைக்கு வந்தார்



அதன்பின் புதுவை சட்ட சபைக்கு அவர் வந்தார். அவர் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சபாநாயகர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபை கூட்டம் நடக்கும் மைய மண்டபத்துக்கு அவரை அழைத்து சென்ற சபாநாயகர் செல்வம் சட்டசபையின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினார். அதன்பின் அவர் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றார்.


மக்கள் பணி


கலெக்டர் பணி குறித்து மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது:-


புதுவையில் ஒருநாள் கலெக்டராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாதது. சாதாரண பொதுமக்களின் குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்வது குறித்து அறிந்துகொண்டேன். கலெக்டர் என்றால் கையெழுத்திடுவது மட்டுமே வேலையல்ல. கலெக்டருக்கு நிறைய வேலைகள் உள்ளன. மக்களுக்கு நிறைய பணிகள் செய்யும் பதவி அது. இதை நான் புரிந்துகொண்டேன். கலெக்டரிடம் கூறினால் தனது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். உயர் பதவியில் இருப்பவர்கள் எப்படி பொதுமக்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதை கலெக்டர் மணிகண்டனை பார்த்து தெரிந்துகொண்டேன். நானும் நன்றாக படித்து கலெக்டராக தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.


இவ்வாறு அவர் கூறினார்.


விழிப்புணர்வு ஏற்படுத்த...


கலெக்டர் மணிகண்டன் கூறும்போது, 'அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டருடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இப்போது மாணவி ஐஸ்வர்யாவுக்கு கலெக்டர் பணி வழங்கப்பட்டது. இது தொடர்ந்து நடைபெறும்' என்றார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...