கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?)...



 தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?)



அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.?


அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்குப் படிப்பு தேவையில்லை என்று தானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?"


உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது.


பழமொழியின் உண்மையான அர்த்தம்:


அந்தக் காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.


இப்போது போல அந்தக் காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.


அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும்.


அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது  

ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும்.


அந்தக் காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து,


"நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவைத் தலையில் வைத்துக் கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகிப் போகும்.


ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்"


அப்படிக் கூறும் அறிவுரை தான்,


அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு? என்பது.


"அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி  பூ எதற்கு என்பது தான் மருவி படிப்பு எதற்கு என்றானது.


இப்படி எத்தனையோ பழமொழிகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு,இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவை குறித்தும், அவற்றின் உண்மையான அர்த்தம் குறித்தும் தொடர்ந்து காண்போம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns