இடுகைகள்

Proverbs லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - "தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்" (A Misunderstood Tamil Proverb - "If the mother jumps eight feet, the child jumps sixteen feet")...

படம்
  தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - "தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்" (A Misunderstood Tamil Proverb - "If the mother jumps eight feet, the child jumps sixteen feet")... 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 இன்றைய பழமொழி... 🥀🌾🥀🌾🥀🌾🥀🌾 "தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்". *விளக்கம்: இது மனிதனுக்கோ அல்லது விலங்கினங்களுக்கோ கூறப்பட்ட பழமொழி அல்ல. மாறாக இது ஒரு விவசாய பழமொழி. *"வாழை"   தார் தள்ளி தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முன்பாகவே தன்னுடைய குலம் தழைத்தோங்கும் வகையில் தன்னைச் சுற்றி தன்னுடைய வருங்கால சந்ததியினரை உருவாக்கிச் செல்வதால் வாழையை தாய் என்றனர்.தென்னையை பிள்ளை என்றனர். "பெற்ற பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்," "பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு தென்னையை நட்டால் இளநீரு" என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். *நெல்லுக்கு நண்டோட *கரும்புக்கு நரியோட *வாழைக்கு வண்டியோட *தென்னைக்கு தேரோட என தாவரங்கள் நடும் போது இரு தாவரங்களுக்கான இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என நம் முன்னோர்

தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?)...

படம்
 தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி - அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? (A Misunderstood Tamil Proverb - Why Study It For Women?) அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு.? அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்குப் படிப்பு தேவையில்லை என்று தானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?" உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. பழமொழியின் உண்மையான அர்த்தம்: அந்தக் காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்தக் காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது. அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும். அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது   ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும். அந்தக் காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து, "நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவைத் தலையில் வைத்துக் கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகிப் போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்" அப்படிக் கூறும் அறிவுரை தான், அடுப்ப

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...