கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...

 

 

  

 பள்ளி மேலாண்மை குழுக் (SMC) கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளி (தொடக்க /நடுநிலை /உயர்நிலைப் பள்ளி) தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை (All Government School (Primary/Middle/High School) Headmasters to follow in School Management Committee Meeting)...


அனைத்து அரசு பள்ளி( தொடக்க /நடுநிலை /உயர் நிலை பள்ளி )தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :


 1.   3.3.2023 அன்று நடைபெறும்  மாதாந்திரபள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்க்கு, அனைத்து  SMC உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


2. தங்கள் பள்ளி சார்ந்த இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கு பெரும் வகையில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


 3. மாநிலத் திட்ட இயக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கூட்டத்தினுடைய கருப்பொருட்கள் முழுமையாக பள்ளி மேலாண்மை குழுவில் பின்பற்றப்பட வேண்டும்.


4. அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் நம்ம ஊர் நம்ம பள்ளி என்ற திட்டத்தின் முழு விவரங்களையும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


5. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்  பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை TNSED parent app இல் SMC கூட்டம் நடைபெறும் நாளில் பதிவு செய்தல் வேண்டும்.


6. CSR மூலம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தனியார் பங்களிப்பின் வாயிலாக  நிதி உதவி பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.  எனவே மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில்   உட்புற கட்டமைப்பு வசதிகளை CSR இல் பதிவு செய்யப்பட வேண்டும்.


7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய உறுப்பினர்கள் வருகை பதிவினை மாலை 5:30  மணிக்குள் அப்டேட் செய்ய வேண்டும்.


8. பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை அன்று மாலை 6:00 மணிக்குள் அப்டேட் செய்திட வேண்டும்.


9.   செயல்முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டக் கருப்பொருட்களை  முறையாக பின்பற்ற வேண்டும்.


10. பள்ளி மேலாண்மை குழுக்களை பலப்படுத்தி நம் பள்ளிகளை வலுப்படுத்துவோம்.



>>> 03-03-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள்...



>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி மையங்கள் & மருத்துவ முகாம் சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

  TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court  TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு...