UPI Payment Charges: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்...
UPI Payment Charges: யுபிஐ பண பரிவர்த்தனைக்கு இனி கட்டணம்...
இனி 2000ரூபாய்க்கு மேல் UPI மூலம் வணிக பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இனி 2000ரூபாய்க்கு மேல் UPI மூலம் வணிக பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையை தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை சூடுபிடிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் உலகில் அதிகம் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை தொட்டது. அமெரிக்காவில் கூட இப்போது தான் வென்மோ போன்ற வற்றின் பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தை தொட்டது.
இப்போது நடைபாதையில் சாக்ஸ் விற்பதில் தொடங்கி பெரிய பெரிய மால்கள் வரை யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை சர்வ சாதாரணமாக கையாளப்படுகிறது. மற்றொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்துக்கும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் மாதம் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று நேஷனல் பேமென்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது - பேடிஎம்.
கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் கூறிய நிலையில் பேடிஎம் விளக்கம்.
யுபிஐ வழியாக ₹ 2,000க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 1.1% கட்டணம் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்திருந்தது.