கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குருபெயர்ச்சி பலன்கள் - மேஷம் - 2023 - 2024

 



குருபெயர்ச்சி பலன்கள் - மேஷம் - 2023 - 2024


இதுவரை மேஷ ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,


ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான

புத்திர ஸ்தானத்தையும்,


ஏழாம் பார்வையாக துலாம் ராசியான

களத்திர ஸ்தானத்தையும்,


ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான

பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

எதிலும் துரிதமாகவும், வேகமாகவும் செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!!


குரு ஜென்ம ராசியில் நிற்பதால் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர சிந்தனைகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வித்தியாசமான கனவுகளினால் அடிக்கடி குழப்பங்கள் உண்டாகும்.


பலன்கள் :


குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமான தம்பதிகளுக்கு மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தொழில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவு பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.


குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் திருத்தல மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கு அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக தொழில்களில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.

பொருளாதாரம்:


புதுமையான சில சிந்தனைகளின் மூலம் வரவுகளை மேம்படுத்துவீர்கள். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:


உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். தூக்கமின்மையால் அடிக்கடி சோர்வும், கோபமும் ஏற்படும். சில நேரங்களில் அலர்ஜி தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு:


பெண்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பெற்றோர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். விருப்பமான சில விஷயங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த செயல்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் குறையும்.

மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றியும், பாராட்டும் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:


புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் உண்டாகும். சில நேரங்களில் தனிமையை விரும்புவீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.

வியாபாரிகளுக்கு:


புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். விவசாய பணிகளில் உற்பத்தி அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு:


கலை சார்ந்த துறைகளில் வரவுகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய துறைகளில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். பாதியில் நின்றுபோன பணிகளை செய்து முடிப்பீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து செல்வதால் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். பேச்சுக்களால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் உட்கட்சி விவகாரங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் தேவையற்ற பகைமை உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்:


ஜென்ம ராசியில் குரு சஞ்சாரம் செய்வதினால் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

கவனம்:


ஜென்மத்தில் குரு சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதால் திடீரென முடிவு எடுப்பதை தவிர்க்கவும். எதிலும் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.

வழிபாடு:


திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரரை வணங்கி வர சிந்தனையில் தெளிவும், உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.


ஏழை மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதனால் நிம்மதி உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...