கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

09.07.2023 - இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு...


09.07.2023 - இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு...


🔴 தருமபுரியில் நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நோக்கில் 8 கி.மீ தூரம் நடைபயிற்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொண்டார்.


🔴 டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் விடுமுறை; தொடர் மழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக டெல்லி அரசு அறிவிப்பு.


🔴 மே.வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கடும் வன்முறை, 14 பேர் பலி


🔴 உ.பி. - ஷஹாபாத் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்த ₹1.5 லட்சம் பணத்தை பையோடு எடுத்துச் சென்ற குரங்கின் வீடியோ வைரலானது.


🔴 புகாரில் கூறியவாறு மின்மாற்றிகள் கொள்முதலில் எந்தவித முறைகேடும் மின்வாரியத்தில் நடைபெறவில்லை. அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டுள்ளதால் முறைகேடுகள் நடந்ததாக புகார்.

கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் மின்சார வாரியம் விளக்கம்.


🔴 ரவுடிகளை அடக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, சென்னையில் ரவுடிகள் இருக்க வாய்ப்பில்லை - பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டியளித்துள்ளார்.


🔴 நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது. இரண்டு படகுகளையும் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அத்துமீறல்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை.


🔴 கடலூர் மாவட்டம் ராசாபேட்டையில் கடலில் இருந்து மீன்கள் திடீரென கரைக்கு வந்தன, மீனவர்கள் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாரி சென்றனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.


🔴 கடலூர் தினத்தந்தி அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் நேரடியாக விசாரணை நடத்தினார்.


🔴 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழக அரசு, விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.

சொத்து விவரம், நில உடமை  மற்றும் வாகன விவரங்களும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.


🔴 மதுரை மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலி பேஸ்ட் விற்க தடை விதித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவு; கடைகளில் எலி பேஸ்ட் விற்பது குறித்து தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம். முன்னதாக எதிர்வினை மருந்துகள் இல்லாததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தடை விதித்துள்ளன.


🔴 கோவை மத்திய சிறைக்குள்  "மேரி பிஸ்கட்" பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கடத்தல். சிறை கைதிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து சப்ளை செய்த இருவர் மீதும், சிறை கைதிகள் இருவர் மீதும்  பந்தய சாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.


🔴 ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி ED விசாரிக்கலாம்  - மத்திய அரசு.


🔴 மத்திய அரசு வேஸ்ட் காட்டன் ஏற்றுமதியை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கழிவு பஞ்சு மில் எனப்படும் ஓ.இ. மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் நூல்கள், விசைத்தறிகளுக்கு அனுப்பப்பட்டு துணியாக உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளால் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி நாளை முதல்வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


🔴 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் உள்ள சாந்தன், இலங்கை அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்காததால் அவரை பார்க்க இலங்கை வர அனுமதி கோரி சாந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். தனது தாயின் முதுமை காலத்தில் அவருடன் தங்கி வாழ அனுமதிக்குமாறு கடிதத்தில் சாந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.


🔴 தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

* சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ்.

* நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ்;

* பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ்;

* வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ்;

* நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ், ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு.


🔴 மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 11ம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


🔴 தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் முகாமிட்டு இருப்பதால் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு. யானைகள் அப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னரே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


🔴 இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கனமழை.

நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிப்பு.

இமாச்சலில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நெடுஞ்சாலை, பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்பு.


🔴 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.90 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற கரூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து   ₹46 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


🔴 சென்னையில் உள்ள ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு. வேளச்சேரி ஏரியில் இன்று மட்டும் 137 லாரிகள் மூலமாக ஆகாயத்தாமரைகள்  அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


🔴 பாரம்பரியமும், புதிய தொழில்நுட்பமும் ஒன்று சேர புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது; இந்த ரயில் 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்; தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்த பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்துள்ளார்.


🔴 குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாரல் மழைக்கு இடையே மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.


🔴 உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுமுறை வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி இருப்பதை உறுதிப்படுத்தவும். காவலர்களுக்கு மன அழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சியை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்த நிலையில் காவல்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.


🔴 கேரள மாநிலம் அட்டப்பாடியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விவசாய பயிர்களை சேதம் செய்த 6 காட்டு யானைகள்,

வனத்துறை, கிராம மக்கள் இணைந்து யானைகளைக் காட்டுக்குள் விரட்டி விட்டனர், மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராதவாறு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு.


🔴 கனடா ஓபன் பேட்மிண்டன் - ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி, ஜப்பான் வீராங்கனை யமகுச்சியிடம் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.


🔴 கலிபோர்னியா மாகாணத்தில் செஸ்னா சி 550 என்ற கார்ப்பரேட் ஜெட் விமானம் விபத்து - 6 பயணிகள் உயிரிழப்பு.


🔴 மோசமான வானிலையால் அமர்நாத் புனித யாத்திரை 3-வது நாளாக தடை... யாத்திரைக்குச் சென்ற 6,000 பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட் விடுதியில் தங்கவைப்பு.


🔴 சூடான் தலைநகரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் பலி.


🔴 சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மணிப்பூர் கலவரத்தை நிறுத்தக் கோரி, தமிழ்நாட்டில் வாழும் மணிப்பூர் மக்கள் அமைதி வழி போராட்டம். இந்த போராட்டத்தில் குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் கலந்து கொண்டனர்


🔴 புதுக்கோட்டை மாவட்டம் பூசுத்துரை பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்பவர் போலந்து நாட்டைச் சேர்ந்த அனியா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


🔴 காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சலுகை அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். பிரியாணி வாங்க குவிந்த மக்களால் காட்பாடி – வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தராததால் கடைக்கு சீல் வைக்க  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


🔴 ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால், ஜம்மு - ஸ்ரீநகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பெயர்ந்து விழுந்தது.


🔴 டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்? எனவும் கேள்வி - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.


🔴 செட்டில்மெண்ட் பத்திரங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.10,000 ஆகவும், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ.40,000 ஆகவும், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ஒரு பத்தாயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு. இந்த கட்டண உயர்வு ஜூலை பத்தாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


🔴 ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தீபக் பிரசாதத்தை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


🔴 பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


🔴 2 வருடத்தில் ஜி பே மூலம் 30 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பம் - சேலத்தில் அதிரடி கைது.


🔴 சென்னை துறைமுக வளாகத்தில் கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் ஹரீஷ் குமார்(24) உயிரிழப்பு.

தங்கள் நிறுவனத்துக்குப் பொருட்களை ஏற்றி வந்த கண்டைனர் லாரிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது; சம்பவம் தொடர்பாகத் துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


🔴 கண்ணே கலைமானே' படத்திற்கு 3 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன.


🔴 தமிழ்நாட்டில் நீர்பாசன திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மைக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர், 'அணையை கண்டிப்பாக கட்டுவோம்' என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது - கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.


🔴 ஹிமாச்சல பிரதேசத்தில் சம்பா - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், பானிகேட் பகுதியில் சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.


வரலாற்றில் இன்று


🔴 ரிப்பன் பிரபு காலமான நாள் இன்று. இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார். இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார். கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார். உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார்.

1829 இராஜா ராம்மோகன் ராய்-யுடன்  இணைந்து சதி முறையை ஒழிக்க பாடுபட்டார்

கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. 1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ராய் ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார். இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முறையை தொடங்கியவர் இவர்தான். இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் "ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது. 


🔴 பனகல் அரசர் பிறந்த நாள் இன்று. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராக பதவியேற்றார் பனகல் அரசர். அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில்தான், “மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை’ என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். இதற்கு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து சாதித்தார் பனகல் அரசர்.

இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரே மருத்துத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த நிலை மாறி, அனைத்து சமூகத்தவரும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது. இது மட்டுமல்ல கோயில் சொத்துக்களை ஒருசிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனி துறையை உருவாக்கியதும் இவரே. இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்தார்: வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

தியாகராய நகரை உருவாக்கியவர் இவரே. அவரது நினைவாக உருவாக்கப்பட்டது தான் தி.நகரில் உள்ள பனகல் பூங்கா. அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்  கீழ் இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. மாகாண முதல்வர்களுக்கு குறைந்த அதிகாரம் தான் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலும் பல பல சாதனைகளைப் புரிந்தார் பனகல் அரசர். அவருக்கு இன்று பிறந்த தினம். நன்றியுடன் நினைவு கூர்வோம்.


🔴 இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் பிறந்த தினம் 1930 ஜூலை 9, இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) உள்ள நன்னிலத்தில் 1930 இல் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார் . பாலசந்தர், "எனது எட்டாவது வருடத்தில் இருந்து நான் சினிமா பார்க்கிறேன்" என்று கூறியதோடு, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் படங்களைப் பார்த்த பிறகு சினிமா மீதான தனது ஆரம்பகால ஆர்வம் வளர்ந்ததை நினைவு கூர்ந்தார் . பன்னிரெண்டாவது வயதில் அவர் நாடகம் மற்றும் நாடகத்தின் மீது ஈர்க்கப்பட்டார், இது இறுதியில் அவர் அமெச்சூர் நாடகங்களை நடிப்பு, எழுதுதல் மற்றும் இயக்குவதில் ஆர்வத்தை வளர்க்க உதவியது. அவர் தொடர்ந்து மேடை நாடகங்களில் பங்கேற்பதால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் (விலங்கியல்) பட்டப்படிப்பைப் படிக்கும் போதும், நாடகத்தின் மீதான அவரது ஆவேசம் தொடர்ந்தது. 1949 இல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1950 இல், அவர் சென்னைக்கு (இப்போது சென்னை) குடிபெயர்ந்தார் மற்றும் கணக்காளர் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு பயிற்சி எழுத்தராக சேர்ந்தார், இந்த நேரத்தில் அவர் ஒரு அமெச்சூர் நாடக நிறுவனமான "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்" இல் சேர்ந்தார். விரைவில் அவர் தனது சொந்த குழுவை உருவாக்கினார், இந்த நேரத்தில் அவர் மேஜர் சந்திரகாந்துடன் ஒரு அமெச்சூர் நாடக ஆசிரியராக முக்கியத்துவம் பெற்றார்., ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மெட்ராஸில் ஆங்கிலத்தின் நோக்கம் மிகவும் குறைவாக இருந்ததால், அவர் நாடகத்தை தமிழில் மீண்டும் எழுதினார், அது இறுதியில் மக்கள் மத்தியில் "உணர்வு" ஆனது. பாலச்சந்தரின் நடிப்பு குழுவில் மேஜர் சுந்தர்ராஜன் , நாகேஷ் , ஸ்ரீகாந்த் மற்றும் சவுகார் ஜானகி போன்ற தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இருந்தனர் . சுந்தர்ராஜன் 900 க்கும் மேற்பட்ட படங்களில், நாகேஷ் 1,000 க்கும் மேற்பட்ட படங்களில், ஸ்ரீகாந்த் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், மற்றும் சௌகார் ஜானகி 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பாலச்சந்தர் எழுதிய மற்ற நாடகங்கள் சர்வர் சுந்தரம் ( பணியாளர் சுந்தரம் ), நீர்க்குமிழி ( நீர்க்குமிழி ), மெழுகுவர்த்தி (மெழுகுவர்த்தி ), நாணல் ( உயரமான புல் ) மற்றும் நவக்கிரகம் ( ஒன்பது கிரகங்கள் ).  இவரே தயாரித்து இயக்கிய இவை அனைத்தும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...