கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


 பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோஜாக்) 07.09.2023 மாநில உயர்மட்டகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் - (Assessment of Ennum Ezhuthum Scheme with B.Ed., studying students - Mass demonstration demanding to abandon - Resolutions taken at the 07.09.2023 state high level meeting of the Joint Action Committee of Tamil Nadu Elementary Teachers' Organizations (TETOJAC) - PDF)...


>>> 07-09-2023 டிட்டோஜாக் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் Click Here to Download TETOJAC Resolutions - PDF...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,

 இன்று மாலை சரியாக 5:45 முதல் 7:00 மணி வரை டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் இணையவழிக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில தலைவர் ரக்ஷித் பங்கேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்ய பி.எட்., மாணவர்கள் பயன்படுத்த மாட்டோம் என்ற தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களின் உறுதிமொழிக்கு மாறாக இன்றைய தினம் ஆங்காங்கே பி.எட்., மாணவர்களை கொண்டு முதுகலை ஆசிரியர்கள் தலைமையில் மதிப்பீடு நடைபெற்றது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் எதிர்ப்பும், திருப்பி அனுப்பிய நிலையும் ஏற்பட்டது. சில இடங்களில் அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுடன் மீண்டும் அப்பள்ளிக்கு சென்று மதிப்பீடை முடித்துள்ளனர் என்ற தகவலும் தரப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சங்க உயர் மட்ட குழு உறுப்பினர்களும் ஒத்த கருத்துடன் எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு செய்வதில் பி எட் மாணவர்கள் பயன்படுத்துவதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த பணிகளில் ஆண்ட்ராய்டு TNSED ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதின் காரணமாக ஏற்படும் பணிச்சுமையையும் அதன் காரணமாக கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதையும் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் திங்கள் மாலை மேற்கண்ட இரு முக்கிய கோரிக்கைகள் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் மாலை 5 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. நம் இயக்கப் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில இணை துணை பொறுப்பாளர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஆர்ப்பாட்டம் வெற்றியடைய அயராது பாடுபட அன்புடன் அழைக்கிறோம் நன்றி...


------

           *💥டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்:*

       *💥டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.*

     *💥11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.*

*💥பிரதானமான கோரிக்கைகள்:*

*♦️(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.*

*♦️(2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.*

*♦️(3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.*

*♦️(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.*

*♦️(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.*

      *💥மாபெரும் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்று கோரிக்கைகளை வென்றெடுத்து தன்மானம்,சுயமரியாதையை மீட்டெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள தயாராவோம்!*

       *💥ஆர்ப்பாட்ட களம் நோக்கி ஆர்ப்பரித்து வாரீர்! வாரீர்!.*

           சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

22-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...