பள்ளிக் கல்வி - அறிவியல் மன்ற செயல்பாடுகள் - "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் -சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்.05.10.2023 (School Education - Science Forum Activities - "Shining Tamil Nadu Shining Tamils" - Tamil Nadu Astronaut Appreciation Events - Exhibition to Students - Advising - Regarding - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No.050188/ SE (NEMU)/ 2023, Dated: 05.10.2023)...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்.05.10.2023
பொருள்: பள்ளிக் கல்வி - அறிவியல் மன்ற செயல்பாடுகள் - "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் -சார்பு. -
2023-24ம் கல்வியாண்டின் அறிவியல் மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி விரர்களுக்கான பாராட்டு விழாவினை அனைத்து பள்ளி மாணவர்களும் கண்டு களித்திடும் வகையில் திரையிட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் -வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்நிகழ்வில் உள்ளுர் அறிவியல் அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மூலம் ஒந்திய ' விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளி சாதனைகளில் தமிழர்களின் பங்கு குறித்து உரைநிகழ்த்திடவும், மாணவர்களிடம் இந்நிகழ்வு குறித்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அக்டோபர் மாதத்திற்கான அறிவியல் மன்ற செயல்பாடுகளை " சந்திராயன் -3 திட்டமும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) சாதனைகளும்" என்ற கருப்பொருளை. அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டு நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு / அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் எதிர்வரும் 09.10.2023
அன்று தொடங்கப்படவுள்ள நிலையில், 10.10.2023 அன்று அனைத்து வகைப்
பள்ளிகளுக்கும் இந்நிகழ்வினை திட்டமிட்டு திரையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேவைப்படும் பள்ளிகளில் LCD Projector/ Smart TV ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வாடகைக்குப் பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுவதுடன், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" நிகழ்வு திரையிடப்பட்டதை ஆவணப்படுத்தி, நிகழ்வு தொடர்பான அறிக்கையினை 10.10.2023 மாலை 05.00 மணிக்குள் desjdnss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு: " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” நிகழ்வின் காணொளி
இணைப்பு
பள்ளிக்கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்