கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024 ஆம் நிதியாண்டு - வருமான வரி கணக்கீடு குறித்த தகவல்கள் (Financial Year 2023-2024 - Information on Income Tax Computation)...



2023-2024 ஆம் நிதியாண்டு - வருமான வரி கணக்கீடு குறித்த தகவல்கள் (Financial Year 2023-2024 - Information on Income Tax Calculation)...


இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது.


*இதில் எது லாபமானது?

1 CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் மொத்த சம்பளம் ரூபாய் 10 லட்சம் முதல் 11 இலட்சம் எனில் அவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கிடும் போது பழைய முறையை விட புதிய முறையில் சுமார் 4000 முதல் 5 ஆயிரம் வரை அவர்களுக்கு குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

2  இதேபோன்று சிபிஎஸ் திட்டத்தில் பணியில் சேர்ந்து 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு முறை முறையில்  8000 முதல் 11 ஆயிரம் வரை அவர்களுக்கு குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

3 இதே நிலையில் ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 12,000 முதல் 15 ஆயிரம் வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

4 ஆண்டு வருமானம் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 20000 முதல் 23 ஆயிரம் வரை வருமான வரி குறைய வாய்ப்பு உள்ளது

5 ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரையும் வருமான வரி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

GPF முறையில் பணி நியமனம் பெற்றவர்கள் ஆண்டு வருமானம் 14 லட்சம் முதல் 15 லட்சம் என இருந்தால் அவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை புதிய கணக்கீட்டு முறையில் வருமான  குறைய வாய்ப்பு உள்ளது.

7 எனவே புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தையும் பழைய வருமான வரி கணக்கிட்டு படிவத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தை (NEW TAX REGIME) தேர்ந்தெடுத்து நமக்கு எவ்வளவு வருமான வரி வரும் என்பதை இப்பொழுதே கணக்கிட்டு அதற்கேற்றவாறு தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்

8 அதிகமான தொகையை நீங்கள் பிடித்தம் செய்தால் அதை திரும்பி வாங்க இயலாது.

9 ஏனெனில் நமக்கு ஏற்கனவே இன்கம் டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸில் வருமான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என காட்டப்பட்டு உள்ளதால் அதிகமான தொகையை நீங்கள் பிடித்தும் செய்தால் அதை வருமான  வருமான வரித்துறை   அதைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

10. எனவே இப்பொழுதே திட்டமிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாராகுமாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

11. வீட்டுக் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூபாய் 2 லட்சம் செலுத்துபவர்களுக்கு பழைய வருமான வரி கணக்கீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்

12. எனவே வீட்டுக் கடன் வட்டியை கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி அதாவது இரண்டு லட்சத்திற்கு கீழாக வட்டி கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி எது குறைவாக வருகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

13.  ஆண்டு வருமானம் 7 லட்சம் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு முறைகளிலுமே வருமான வரி கட்டத் தேவையில்லை.

14. புதிய வருமான வரி கணக்கிட்டு படிவத்தின் படி, 2023-2024 ஆம் நிதியாண்டில்

 ரூ.50,000 Standard Deduction உண்டு.


மேலும்,

UPTO 3 LAKHS - NIL TAX


3 LAKH TO 6 LAKH  -   5%


6 LAKH TO 9 LAKH  -  10%


9LAKH TO 12 LAKH -  15%


12 LAKH TO 15 LAKH  -  20%


ABOVE 15 LAKH  -  30 %



  அனைவருக்கும் வணக்கம் வருமான வரி குறித்த கூடுதல் தகவல்கள்...


  1.  பத்து லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வருமான வரியை குறைவாக கட்ட இயலும்

  2. வீட்டுக் கடனுக்கான வட்டி ரூபாய் 2 லட்சத்தை செலுத்துபவர்கள் பழைய முறையை பயன்படுத்தி வருமான வரியை செலுத்தலாம்.

3. சிலருக்கு சந்தேகம் வரக்கூடும் புதிய முறையில் இந்த ஆண்டு வருமான வரி  செலுத்தினால் அடுத்த ஆண்டு மீண்டும் பழைய முறைக்கு செல்ல முடியுமா என்று சிலர் யோசிக்கக்கூடும் ஒரு நிதியாண்டில் மாத சம்பளம் பெறும் ஒருவர் இவ்வாண்டு புதிய முறையில் வருமான வரி தாக்கல் செய்துவிட்டு அடுத்த ஆண்டு மீண்டும் பழைய முறைக்கு திரும்ப முடியும் எனவே இது குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை.


4. ஆண்டு வருமானம் ரூபாய் 15 லட்சத்தை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையில் கணக்கு தாக்கல் செய்யும்போது 40 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.


5. அனைத்து ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் ஊதியம் நிர்ணயம் செய்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆகிய  அனைவருக்கும் (அதாவது வீட்டுக் கடனுக்கான  வட்டி ரூபாய் 2 லட்சத்தை செலுத்தாத இவர்களுக்கு) புதிய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறையே சிறந்தது.
   

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...