கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தேர்வு (SEAS) - புறக்கணித்த 6 மாநிலங்கள் (State Education Achievement Survey Exam - 6 States Skipped)...

 

மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தேர்வு (SEAS) - புறக்கணித்த 6 மாநிலங்கள் (State Education Achievement Survey Exam - 6 States Skipped)...


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) கீழ் இயங்கி வரும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவாற்றல் ஆய்வு மற்றும் மறு ஆய்வு அமைப்பு (பராக்) சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநில கற்றல் அடைவுத் திறனாய்வு தில்லி, சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புறக்கணித்து உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) கீழ் இயங்கி வரும் முழுமையான வளா்ச்சிக்கான அறிவாற்றல் ஆய்வு மற்றும் மறு ஆய்வு அமைப்பு (பராக்) சாா்பில் நடத்தப்பட்ட முதல் மாநில கற்றல் அடைவுத்திறன் ஆய்வை தில்லி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஓடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புறக்கணித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.


மாணவா்களின் கற்றல் அடைவுத் திறனை அறிந்து அதனடிப்படையில் பள்ளி கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை அடையாளம் காணும் நோக்கத்தோடு, நாடு முழுவதும் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களிடையே கடந்த 3-ஆம் தேதி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


குறிப்பாக, நாடு முழுவதும் 5,917 வட்டாரங்கள் அளவில் உள்ள 3 லட்சம் பள்ளிகளைச் சோ்ந்த 80 லட்சம் மாணவா்கள், 6 லட்சம் ஆசிரியா்களிடையே 3 லட்சம் களப் பணியாளா்கள் மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அடிப்படை, தொடக்கநிலை மற்றும் நடுநிலை பள்ளிக் கல்வி அளவில் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்து, அதனை மேம்படுத்துவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த கணக்கெடுப்பில் தில்லி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஓடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தவிா்த்து, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன’ என்றாா்.



இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘வட்டார அளவிலான பள்ளி மாணவா்களிடையே கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்வதே இந்த கணக்கெடுப்பின் சிறப்பு. இதன் மூலமாக, நாடு முழுவதும் கல்வி நடைமுறையில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவான ஆதார அடிப்படையிலான தரவுகள் கிடைக்கும். அதனைக் கொண்டு மாணவா்களுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும்’ என்றாா்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2025

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதி...