கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12ஆம் வகுப்பு / பொறியியல் / பி.காம்., தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் வேலை...



12ஆம் வகுப்பு / பொறியியல் / பி.காம்., தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் வேலை...


தெற்கு மண்டல விமான நிலையங்களில் காலியாக உள்ள  ‘சி’ பிரிவு  காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலிப்பணியிட விவரங்கள்:


இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) 


காலியிடங்கள் எண்ணிக்கை - 73


அடிப்படைத் தகுதிகள் - 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.


அடிப்படை நிபந்தனைகள் : முன்னாள் படைவீரர்களுக்கான  பின்னடைவு பணியிடங்களாகும் (BACKLOG VACANCIES). அப்பிரிவினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.


இளநிலை உதவியாளர் (நிர்வாகம்) 


காலியிடங்கள் எண்ணிக்கை - 02


அடிப்படைத் தகுதிகள் - ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


அடிப்படை நிபந்தனைகள் : மாற்றுத் திறனாளிகளுக்கா பின்னடைவு பணியிடங்களாகும். (BACKLOG VACANCIES)  அப்பிரிவினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.


முதுநிலை உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்)


காலியிடங்கள் எண்ணிக்கை - 25


அடிப்படைத் தகுதிகள் - எலக்ட்ரானிக்ஸ்/ தொலை தொடர்பு/ ரேடியோ இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; தொடர்புடைய துறைகளில் இரண்டு வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்


அடிப்படை நிபந்தனைகள் :  அனைத்து தரப்பினரும் இதற்கு  விண்ணப்பிக்கலாம்.


இருப்பினும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் பொதுப் பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.


இளநிலை உதவியாளர் (கணக்கு)


காலியிடங்கள் எண்ணிக்கை - 19


அடிப்படைத் தகுதிகள் - பி.காம் முடித்திருக்க வேண்டும்; தொடர்புடைய துறைகளில் இரண்டு வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


அடிப்படை நிபந்தனைகள் : அனைத்து தரப்பினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்


அனைத்து பதவிகளுக்கும், இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விவரம்,  கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பக் கட்டணம்: 

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர், பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் வயது வரம்பு 20/12/2023  அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் பிரிவினர் / பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். 


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர்.


நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் செய்வது எப்படி?



இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. 

www.aai.aero என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 


இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது.


எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். 


இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 


மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.



>>> CLICK HERE TO DOWNLOAD - DIRECT RECRUITMENT OF JUNIOR EXECUTIVES (AIR TRAFFIC CONTROL) IN AIRPORTS AUTHORITY OF INDIA ADVERTISEMENT No. 05/2023...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns