தொலைத் தொடர்பு மசோதா 2023 (Telecommunication Bill) -ன் முக்கிய அம்சங்கள்...
சிம் வாங்க போலி ஆவணங்களை கொடுத்தால் சிறை உறுதி: மத்திய அரசு...
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் வாங்கினால், 3 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு மசோதா 2023 -ன் முக்கிய அம்சங்கள்:
- தொலைத் தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
- போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.
- தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்
- தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.