எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்:
வாழ்வாதாரம் பாதித்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்.
எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகுகளுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம்.
சிபிசிஎல் நிறுவனம் 7 கோடியே 53 லட்ச ரூபாயை பசுமை தீர்ப்பாயத்தில் செலுத்த இருப்பதாகவும் தகவல்-தமிழக அரசு.
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 12,500 நிவாரணம் அளிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிவாரணத் தொகை:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலினால் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை எண்ணூர் பகுதியில், மணலியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து பெட்ரோலிய எண்ணை கசிந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்த்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் பரவியது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலைகள் போன்ற பெரும்பாலானவை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கடல் பகுதியில் உள்ள மீன்கள், பறவைகள், கடல் ஆமை, தாவரங்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சென்னை முகத்துவார பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட 2301 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12500 நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று மீன்வளத்துறை தற்போது அறிவித்துள்ளது. பசுமை தீர்ப்பாயம் எண்ணெய் கசிவு காரணமாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த நிலையில் மீன்வளத்துறை சார்பாக பதில் அளித்துள்ளது.