கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை (நிலை) எண்: 243, நாள்: 21-12-2023 வெளியீடு...


தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை (நிலை) எண்: 243, நாள்: 21-12-2023 வெளியீடு - State Level Seniority Preference for Teachers Working in Elementary Education Department - Tamil Nadu Elementary Education Subordinate Service Amendment Ordinance G.O.(Ms) No: 243, Dated: 21-12-2023...



>>> Click Here to Download G.O.(Ms) No: 243, Dated: 21-12-2023...


1) 01.01.2024 முதல் மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும்.


2) பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இனிமேல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற இயலும்.


3) பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்  State Seniority என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.


 தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...