விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனை (A copy of a book written by scientist Isaac Newton has been auctioned for $37 lakh - about Rs 25 crore)...
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனை!!!
புவி ஈர்ப்பு விசை, பருப்பொருள்களின் இயக்க விதிகள் உள்ளிட்டவை ஐசக் நியூட்டனின் மகத்தான கண்டுபிடிப்புகள்.
அவரது அறிவியல் கண்டுபிடிப்புகளை விவரித்து எழுதிய "பிரின்சிபியா மேத்தமேட்டிகா (Principia Mathematica)" என்ற புத்தகத்தை 1687-ஆம் ஆண்டு வெளியிட்டார்.
லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி ஏலத்தில் விற்பனைக்கு வந்தது.
நியூயார்க்கில் உள்ள பிரபல கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் அதனை விற்பனைக்கு கொண்டு வந்தது.
அந்தப் புத்தகம் 15 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 10 கோடி) விற்பனையாகும் என்று கிறிஸ்டீஸ் நிறுவனம் கருதியது.
இந்த நிலையில், அந்த அரிய புத்தகம் 37.19 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனையாகியது.
அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
விஞ்ஞான நூலொன்று இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை.
இதற்கு முன் அதிக விலைக்கு விற்பனையான புத்தகமும் ஐசக் நியூட்டனின் "பிரின்சிபியா மேத்தமேட்டிகா'தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் அரசர் ஜேம்ஸ்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முதல் பதிப்புப் பிரதி இதே கிறிஸ்டீஸ் நியூயார்க் ஏல விற்பனை நிலையத்தில் 25 லட்சம் டாலருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனையானது.
புகைப்படங்கள் == முதல் பதிப்பும் நியூட்டன் தமது கையால் திருத்தம் செய்த இரண்டாம் பதிப்பும் தற்போதைய பதிப்பும்