கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...



 அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது..



கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.



செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.



ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு  பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.



இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.



பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அழிக்க முடியாத ஆவணமாகிவிடும் என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...