கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடன் சுழல் (Debt Trap) - நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? கண்டுகொள்வது எப்படி?



கடன் சுழல் (Debt Trap) - நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? கண்டுகொள்வது எப்படி?


கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது பலவற்றையோ நீங்கள் செய்தால் கடன் சூழலில் சிக்கி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 


1️⃣ உங்களது மொத்த மாதாந்திர EMI, உங்கள் வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால்…


2️⃣ மாதாந்திர செலவுகள் (EMI மற்றும் வீட்டு செலவுகள்) உங்களது வருமானத்தில் 70% க்கு மேல் இருந்தால்…


3️⃣ உங்களது அன்றாட செலவுகளுக்கு (பள்ளிக் கட்டணம், சுற்றுலா போன்றவை) கடன் வாங்கினால்…


4️⃣ ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்குகிறீர்கள் என்றால்…


5️⃣ Credit கார்டில் பணம் withdraw செய்தீர்களென்றால்…


6️⃣ Credit card outstanding ஐ மாதா மாதம் முழுமையாக செலுத்தாமல் மினிமம் பேலன்ஸ் மட்டுமே செலுத்தி வருவதை வழக்கமாக கொண்டிருப்பது.

 

7️⃣ உங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பது. உங்களது மாதாந்திர EMI, வருமானத்தில் 50% க்கு மேல் இருந்தால் வங்கிகள் கடன் தர மறுத்துவிடுவார்கள். வங்கிகள் தரவில்லையென்று NBFC க்கு சென்று கடன் கேட்டால் வட்டி 13% க்கு மேல் இருக்கும். அதிலும் கிடைக்கவில்லையென்றால் app களில் கடன் வாங்க முற்படுவீர்கள். 


8️⃣ மாதாந்திர billகளை கட்ட தாமதித்தாலோ அல்லது கட்டவில்லையென்றாலோ…


9️⃣ நாளை வரப்போகும் வருமானத்தை வைத்து, இன்றே கடன் வாங்குவது. உதாரணமாக, நான்கு மாதங்கள் கழித்து உங்களுக்கு போனஸ் தொகை ௹2,50,000 வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அதற்கு காத்திராமல், இந்த மாதமே “அதான் நாலு மாசம் கழித்து வருதே, அத வச்சி அடைச்சிடலாம்” என்று நினைத்து கடன் வாங்கி செலவு செய்வது. 


🔟 ஏறும் வட்டி விகிதங்களை சமாளிக்க முடியாமல் திணறுவது. அதற்கு பணமில்லாமல் தவிப்பது. 


மேற்க்கண்ட எந்தவொரு சூழலிலும் சிக்காமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


கடன் சூழலில் சிக்கித் தவிக்கும் அன்பர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இரண்டே வழிகள் தான். 


1. வருமானத்தை உயர்த்துங்கள். 

2. செலவுகளை குறையுங்கள். 


சிந்தித்து, செலவழியுங்கள். 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns