கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 397:


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.


விளக்கம்:

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?




பழமொழி : 


Coming events cast their shadow before.


ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...


பொன்மொழி:


To succeed in life, you need two things: ignorance and confidence. Mark Twain 


வாழ்வில் வெற்றிபெற இரண்டு கூறுகள் தேவை. அவை, அறியாமையை அறிதல், நம்பிக்கை - மார்க் ட்வைன்



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்

பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.

சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+

சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Begin - தொடங்கு

Behind - பின்னால் 

Believe - நம்பு

Beneath - கீழே 


ஆரோக்கியம்


கீரைகள்


எல்லாக் கீரைகளிலுமே சக்திவாய்ந்த பீட்டா-கரோட்டின் (Beta-Carotene) உள்ளது. இது நோய்களுக்கு எதிராகப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட். எனவே, இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கீரைகளில் லுடீன் (Lutein) உட்பட பல முக்கியமான பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இவை, கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தைத் தடுக்க உதவுகின்றன. கீரையில் லிபோயிக் அமிலம் (Lipoic Acid) இருக்கிறது. இந்த அமிலம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். கீரைகளில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்த அளவில் இருக்கின்றன. ஆக, சைவப் பிரியர்களுக்கு கீரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய முக்கியமான உணவு. 



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 12


பிறந்த நாள் 

1863 – விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902)


1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி


நினைவு நாள் 

1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1890)


சிறப்பு நாட்கள்

தேசிய இளைஞர் நாள் (இந்தியா)

சான்சிபார் புரட்சி நாள் (தன்சானியா)



நீதிக்கதை


முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.


ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.


கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.


எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.

கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.


மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.



அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.


கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.


அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.


மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.


தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.


நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.



 

இன்றைய முக்கிய செய்திகள் 


12-01-2024 


கடலோர வளங்களை மீட்டெடுப்பதற்காக “நெய்தல் மீட்சி இயக்கத்தினை” துவக்கி வைத்தது தமிழ்நாடு அரசு...


நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா இன்று தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்...


ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் ஜன.24 வரை நீட்டிப்பு...


வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15ம் தேதியில் விலகுவதற்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்...


6,151 பணியிடங்களுக்கான குரூப் – 2 முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...


தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் சீரமைக்க திட்டம்...


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலை (NEET PG) 2024 ஜூலை 7 க்கு ஒத்திவைக்கப்பட்டது...


Today's Headlines:

12-01-2024


Tamil Nadu Government has launched a “Weather Recovery Movement” to restore coastal resources...


 National Youth Festival begins in Nashik today: PM Modi inaugurates... 


Court custody of ED officer Ankit Tiwari, who is in jail in the Rs 20 lakh bribery case, has been extended till Jan 24... 


Northeast Monsoon likely to withdraw from South India on January 15: Meteorological Department informs...


TNPSC released results for Group – 2 Mains for 6,151 Posts... 


Accident areas on national highways identified and Rs 900 crore repair plan... 


National Eligibility and Entrance Test Postgraduate (NEET PG) 2024 Postponed to 7th July...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...