கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் தொடர்பான கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம், தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை...


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...


இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்குதல் தொடர்பான கருவூலக் கணக்கு ஆணையரின் கடிதம் ஓ. மு.  எண்‌ 829/ டி2/ 2023, நாள்‌. 13.01.2023, தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.௧.எண்‌ 13339/இ3/2019, நாள்‌ 05.01.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்‌ 213. பள்ளிக்‌ கல்வித்‌ (தொ.க.(1) துறை, நாள்‌ 02.12.2022...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருவூலம்‌ மற்றும்‌ கணக்குத்‌ துறை


அனுப்புநர்‌ 


கருவூலக்‌ கணக்கு ஆணையர்‌ 

9-வது தளம்‌, ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகம்‌,

அண்ணா சாலை, நந்தனம்‌,

சென்னை


பெறுநர்‌

1. அனைத்து சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌

2. அனைத்து கருவூல அலுவலர்கள்‌


ஓ. மு.  எண்‌ 829/ டி2/ 2023, நாள்‌. 13.01.2023


தொடக்கக்‌ கல்வி - வழக்கு இடைநிலை ஆசிரியர்‌ மற்றும்‌ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணிக்காலத்தையும்‌ சேர்த்து கணக்கில்‌ கொண்டு நருநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பதலியில்‌ தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கி பட்டியல்‌ சமர்ப்பித்தல்‌ - தொடர்பாக


பார்வை : 1. இயக்குநர்‌, தொடக்கக்கல்வி இயக்ககம்‌, சென்னை அவர்களின்‌ ந.௧.எண்‌ 13339/இ3/2019, நாள்‌ 05.01.2023 

2. அரசாணை (நிலை) எண்‌ 213. பள்ளிக்‌ கல்வித்‌ (தொ.க.(1) துறை, நாள்‌ 02.12.2022



 பார்வை 1-ல்‌ கண்ட கடிதத்தில்‌, இடைநிலை ஆசிரியர்‌ மற்றும்‌ தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணிக்காலத்தையும்‌ சேர்த்து கணக்கில்‌ கொண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பதவியில்‌ தேர்வுநிலை சிறப்பு நிலை அரசாணை (நிலை)எண்‌ 210, பள்ளிக்கலலித்‌ (ஜி1) துறை, நாள்‌ 14.08,2009-ன்படி பலன்களை நீட்டித்து வழங்க கோரிய நீதிமன்ற வழக்கினைத்‌ தொடர்ந்து, பார்வை 2-ல்‌ கண்ட அரசாணையின்படி நீதிமன்ற வழக்கு தொடர்ந்த 612 மனுதாரர்கள்‌ / ஆசிரியர்களுக்கு மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பதவியில்‌ தேர்வுநிலை சிறப்பு நிலைக்கான ஊதிய நிர்ணயம்‌ செய்ய அரசு அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.அரசாணை நகல்‌ உரிய நடவடிக்கைக்காக இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது.


இணைப்பு -மேற்படி


ஒம்‌/-ந.தாயுமானவன்‌

நேர்முக உதவியாளர்‌ (கருவூலக்‌ கட்டுப்பாடு)

கருவூலக்‌ கணக்கு ஆணையரகம்‌.


// ஆணைப்படி அனுப்பலாகிறது //


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...