செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) ஆதிக்கம் - பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் - பறிபோகும் வேலைவாய்ப்புகள்...
Artifial Intelligence இதனை சுருக்கமாக AI என்றும் அழைக்கின்றனர். இந்த அசாதாரண தொழில்நுட்பம் புதிய உலகை படைத்துக்கொண்டிருக்கிறது.
நம் வாழ்க்கையின் பாதிக்கும் மேல் மொபைலிலேயே கழித்து விடுகிறோம். ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ் ஆதிக்கம் இன்னும் அதிகமாகும் போது நம் வேலைகள் பலமடங்கு எளிமையாகும்.
இது பெரிய நிறுவனங்களில் வேலை நீக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் புதிய சாஃப்ட்வேரையே உருவாக்க முடியும் அளவு வளர்ந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பல ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் என்று பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊழியர்கள் நீக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்த ஜூலை 2023ல் பெங்களூருவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இ-காமர்ஸ் நிறுவனமான டுகான் (Dukaan), வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலரும் அந்த நிறுவனத்தை விமர்சித்தனர். இந்த அதிரடி செயல் மாதச் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களின் நிலையைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (AI) அதிகரித்து வரும் பங்கை ஏற்றுக்கொள்ளும் முயற்சியில், கூகுள் தனது 30,000 நபர்களை கொண்ட விளம்பர விற்பனை பிரிவுக்குள் கணிசமான மறுசீரமைப்பைப் பற்றி சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது, குறிப்பாக 2023 இல் 12,000 பணியாளர்களை பாதித்த கூகுளின் சமீபத்திய பணிநீக்கங்களைத் தொடர்ந்து, சாத்தியமான வேலை வெட்டுக்கள் பற்றிய கவலையைத் தூண்டியுள்ளது.
இந்த மறுசீரமைப்பு, அதன் பல்வேறு தளங்களில் விளம்பர கொள்முதலை நெறிப்படுத்த இயந்திர கற்றல் நுட்பங்களை Google இன் வளர்ந்து வரும் நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது. பல ஆண்டுகளாக, தொழில்நுட்ப நிறுவனமானது புதிய விளம்பரங்களை உருவாக்குவதை தானியக்கமாக்க வடிவமைக்கப்பட்ட AI-இயங்கும் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் வருடாந்திர வருவாயில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவிகளின் செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர் ஈடுபாட்டுடன் இணைந்து, அதிக லாபம் ஈட்டுகிறது.
PMmax போன்ற AI கருவிகள் விளம்பரதாரர்களிடையே பிரபலமடைந்து வருவதால், விளம்பர வடிவமைப்பு மற்றும் விற்பனையில் மனித தலையீட்டின் தேவை குறைவது குறிப்பிடத்தக்கது. AI கருவிகளின் செலவு-செயல்திறன், குறைந்தபட்ச பணியாளர் தேவை, விளம்பர வருவாயின் லாபத்தை அதிகரிக்கிறது.
எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு விளம்பரப் பிரிவின் பணியாளர்களின் குறிப்பிடத்தக்க பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை சுமார் 13,500 நபர்கள் விற்பனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அறிக்கை கூறியது.
Paytm ஊழியர்கள் 1000 பேர் பணி நீக்கம்...
டிஜிட்டல் பேமென்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. . இதை பேடிஎம் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக இந்த ஆட்குறைப்பு ஆபரேஷன் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் நடந்துள்ளது. டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள் அவர்களின் செலவுகளைக் குறைப்பதற்காக பல செயல்பாடுகளுக்கு ஏஐ மாடலை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. மீண்டும் மீண்டும் ஒரே வேலையை செய்யும் நபர்களை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக AI tool பயன்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனால் செலவுகளை குறைத்து அதிக செயல் திறனை ஏற்படுத்தி ஊழியர்களின் செலவை 15 சதவீதம் வரை குறைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
அதே சமயம் தற்போதைய சூழலில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கத்துக்கான இழப்பீடு தொகை வழங்கப்படுமா அல்லது மேலும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமா என உறுதியான தகவல் வெளியாகவில்லை.
``இறுதியில் உழைக்கும் ஊழியர்கள் ஒருபோதும் உயரப்போவதில்லை, ஊழியர்களின் உழைப்பை வாங்கிய நிறுவனம் எந்தக் காலத்திலும் ஊழியர்களை நினைக்கப் போவதுமில்லை'' என ஊழியர்கள் தரப்பில் இருந்து ஆதங்க குரல்கள் ஒலித்து வருகின்றன.
AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக 2024ஆம் ஆண்டில் ஜனவரி 14 வரை மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட 46 நிறுவனங்களில் இருந்து 7,528 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
கடந்த ஆண்டில் உலகம் முழுவதிலும் 4,25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 36,000 பேர் இந்தியர்கள்...
இத்தகைய பணியாளர்கள் வேலையிழப்பு சூழல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.