கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி- உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்...

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி- உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்...


ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது.


புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளது.


இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.


இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.



அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.


இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு தொடர்பாக அங்குள்ள இந்தியர்களுக்காக தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, +81-80-3930-1715 (திரு. யாகுப் டாப்னோ), +81-70-1492-0049 (திரு. அஜய் சேதி), +81-80-3214-4734 (திரு. டி.என். பர்ன்வால்), +81-80-6229-5382 (திரு.எஸ்.பட்டாச்சார்யா), +81-80-3214-4722 (திரு. விவேக் ரத்தீ).


மேலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...