கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 421:


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.


விளக்கம் :

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.




பழமொழி : 


Health is wealth.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.


பொன்மொழி:


Your current conditions do not reflect your ultimate potential.


 உங்கள் தற்போதைய நிலை உங்கள் கடைசி நிலையைப் பிரதிபலிப்பதில்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு

கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்

எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்

உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்

மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Corner - மூலை 

Correct - சரியாக 

Cotton - பருத்தி 

Country - நாடு 

Count - எண்ணுதல் 

Couple - இணையர் 


ஆரோக்கியம்


சத்தான உணவு என்பது எது?


புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகிய சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை. ஒன்றிணைந்த இந்தச் சத்துகளின் மூலமாக உடல் வளர்ச்சி, செயல்திறன் போன்றவை கிடைக்கின்றன.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 09


1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.



பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-



சிறப்பு நாட்கள்


-



நீதிக்கதை



தன்வினை தன்னைச் சுடும்


அது ஒரு கடும் குளிர்கால காலைப்பொழுது காடு முழுவதும் பணி பெய்திருந்தது. எல்லா இடங்களுமே அடர்த்தியாக பெய்திருந்த பணியால் பளிச்சென்று வெண்மையாக காட்சியளித்தன. எல்லா பறவைகளும், விலங்குகளும் தம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தன. எதற்குமே இறைக் கிடைக்கவில்லை பசியோடு இருந்தன. மேலும் வெளியே மிகக் குளிராக இருந்ததால் அவை உள்ளேயே முடங்கி கிடந்தன.


ஆனால் அவற்றுள் ஒரு பிராணிக்கு தூக்கமே வரவில்லை. அது ஒரு வெட்டுக்கிளி. அதிகமாக சத்தம் எழுப்பும் பிராணி அது. எல்லா உயிரினங்களுமே தூங்கிக்  கொண்டிருந்ததால் அதற்கு பொழுது போகவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க அது விரும்பியது.


வெளியே வந்தவுடன் காடு முழுவதும் வெண்மையாக இருப்பதைக் கண்டது. காண்பதற்கு காடு மிக அழகாக இருந்ததால் வெட்டுக்கிளிக்கு பாட வேண்டும் போல் இருந்தது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தத்தி தத்திச் சென்று ஒரு மரத்தை அடைந்தது. சத்தமாக பாடத் தொடங்கியது. தன் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து பாட்டுக்கு தாளம் போட்டு உல்லாசமாக இருந்தது.



அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் ஓர் ஆந்தை வாழ்ந்து வந்தது. கடும் குளிராக இருந்ததால் இத்தனை நாட்களாக அது தூங்கிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளியின் சத்தமான பாட்டை கேட்டு ஆந்தை கண் விழித்தது. “யார் இந்த சத்தமாக பாடும் பிராணி, என் குளிர்கால தூக்கத்துக்கு இடையூறாக இருப்பது?” என்று ஆந்தை தனக்குள் கேட்டுக் கொண்டது.



பொந்திலிருந்து தலையை நீட்டி ஆந்தை வெளியே பார்த்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தவாறு வெட்டுக்கிளி ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. தன் தூக்கத்திற்கு இடையூறு செய்த வெட்டுக்கிளி மீது ஆந்தைக்கு கடும் கோபம் ஏற்பட்டது. ஒரு குளிர்கால காலைப் பொழுதில் திடீரென்று எழுப்பப்பட்டதால் அதற்கு மிகவும் பசித்தது.


பாடிக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளியை சத்தமில்லாமல் ஆந்தை நெருங்கியது. தன்னுடைய அலகால் அந்த முட்டாள் வெட்டுக் கிளியை பிடித்த சாப்பிட்டது.


பொந்துக்குத் திரும்பிய ஆந்தை குளிர்காலம் முடியும் வரை நிம்மதியாக தூங்கியது. எல்லா பிராணிகளைப் போல வெட்டுக்கிளியும் தன் இருப்பிடத்திலேயே குளிர்காலம் முழுவதும் இருந்திருந்தால் அனாவசியமாக தன் உயிரை இழந்து இருக்காது.


 நீதி : விவேகமற்ற வேகம் விபத்தை தரும்.






இன்றைய முக்கிய செய்திகள் 


09-02-2024 


பல்வேறு துறைகளின் சார்பில் 9,948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


வாக்கு எண்ணிக்கைக்காக மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு...


எல்லையில் புகுந்த மியான்மர் ராணுவம்.! இந்தியா-மியான்மர் எல்லை பகுதியை மூட முடிவு; ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்...


பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே.. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை : சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி...


வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.! 6.5 சதவீதமாக நீடிக்கிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு...


மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளை பிப்ரவரி 17-ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது: இஸ்ரோ தகவல்...




Today's Headlines:

09-02-2024


On behalf of various departments, Minister Udayanidhi Stalin provided various welfare assistance worth Rs.70.56 crore to 9,948 beneficiaries... 


Case seeking ban on use of medical college for counting of votes: Election Commission directs ECtHR branch to respond... 


Myanmar army entered the border. Decision to close India-Myanmar border area; Union Home Minister Amit Shah informs...


Bomb threat to schools is a hoax.. People need not panic: Chennai South Additional Commissioner Prem Anand Sinha interview... 


There is no change in repo interest rate for short term loans of banks. Remains at 6.5 Percent: RBI Announces... 


Those who applied for Michaung cyclone relief without ration card will be given Rs 6,000 soon: Tamil Nadu Government Notification...


Weather and disaster warning satellite to be launched on February 17 evening: ISRO informs...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...