கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1-5ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளி அளவில் 27/2/2024 முதல் 29/2/2024வரை பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துதல் குறித்த தகவல்கள்...

 


அனைவருக்கும் வணக்கம்.


அனைத்து வகையான *அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்* பள்ளிகளில் பயிலும் *1-5ஆம் வகுப்பு* மாணவ மாணவிகளுக்கு *பள்ளி அளவில் 27/2/2024 முதல் 29/2/2024வரை*  மதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் திட்ட இயக்குனர்,பள்ளி கல்வி இயக்குனர் மற்றும்தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளவாறு *பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகள்* நடத்தப்பட வேண்டும்.


அதற்கு முன்னர் அந்த *போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை emis ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* என்று முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


எனவே *அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்* பள்ளிகளின் *தலைமை ஆசிரியர்கள்* போட்டிகளில் பங்கேற்கும் 1-5 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருந்து *தகவல் அளிக்கப்பட்டவுடன் emis ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


*வட்டார கல்வி அலுவலர்கள் , வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் emis ஒருங்கிணைப்பாளர்கள்* அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவ மாணவிகள் *பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அதிக எண்ணிக்கையில் emis ல் பதிவேற்றம் செய்யப்படுவதை* உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி



>>>  1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்" கொண்டாட உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE & SPD Joint Proceedings...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிசயத்தின் விலை - இன்றைய சிறுகதை

  அதிசயத்தின் விலை - இன்று ஒரு சிறு கதை The Price of Miracle - Today's short story அதிசயங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம் 🍁🍁...