கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15-02-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 425:


உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.


விளக்கம்:


உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.




பழமொழி : 


Man proposes, God disposes.


தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.



பொன்மொழி:


Life is change; growth is optional. Choose wisely.


 வாழ்க்கை மாற்றங்களுக்குரியது – வளர்ச்சி நம் விருப்பத்துக்குரியது – புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்

வேலையின் அலகு - ஜூல்

1 குவிண்டால் என்பது - 1000 கி.கி

டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்

அணு என்பது - நடுநிலையானது

எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்

நியூட்ரானின் நிறை - 1.00867 amu



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Deceive - ஏமாற்று 

Decision - முடிவு 

Dedicate - அர்பணிப்பு 

Deed - செயல் 

Deep thinking - ஆழமான சிந்தனை

Deer - மான் 


ஆரோக்கியம்


சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயால் உடலுக்கு நலம் கிடைக்குமா?


ஒரேயொரு எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதைவிட, இரண்டு வகையான எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். உதாரணத்துக்குக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்-பிரான் (அரிசி தவிட்டு) எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு வாரத்துக்குச் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பு அதிகரிப்பதில்லை. உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். எனவே, உடல் ஆரோக்கியம் மேம்படும்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 15


1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.


பிறந்த நாள் 

1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642)


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (ஆப்கானித்தான்)

பரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)

முழுமையான பாதுகாப்பு நாள் (சிங்கப்பூர்)



நீதிக்கதை


எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது..


ஒருமுறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்றுவிட தீர்மானித்தான். அருகில் உள்ள கிராமத்துக்கு தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்து போனார்கள். கழுதையின் மீது ஏறி சென்றால் அது களைப்படையலாம் அதனால் அதற்கு நல்ல விலை கிடைக்காமல் போகலாம் என்று விவசாயி எண்ணிதால் அதன் மீது ஏறாமல் அதை இழுத்தவாறு சென்றான்.


வழியில் செல்லும்போது சில வழிப்போக்கர்கள் இவர்களை பார்த்து சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாள்களை பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது ஏறி சவாரி செய்யலாமே,” என்று கேலியாக சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தை தொடர்ந்தான்.


சிறிது தொலைவு சென்ற பிறகு வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களை கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சை கேட்டவுடன் அவர்களை திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கி தந்தையை கழுதையின் மீது உட்கார செய்தான். தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். 


இன்னும் சிறிது தொலைவு சென்றதும் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களை பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வர சொல்லி கொடுமைப்படுத்துகிறானே,” என்று விவசாயியை குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன்மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.


இப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாக கழுதையின் மீது அமர்ந்து பயணத்தை தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களை பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள் பாவம் அந்த கழுதை கண்டிப்பாக சுமை தாங்காமல் நொடிந்து போகும்,” என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீது இருந்து கீழே குதித்தார்கள்.


கழுதையை தூக்கிக் கொண்டு செல்வதுதான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தார்கள். மிகவும் சிரமப்பட்டு கழுதையின் கால்களை கட்டிய பிறகு, ஒரு கொம்பில் அதை கட்டி அதை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். 


கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீது இருந்தவர் பாலத்தை அவர்கள் கடக்க வேண்டி இருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டு கழுதையை தூக்கிக் கொண்டு வரும் வினோத காட்சியை, ஆற்றுக்கு அக்கறையில் இருந்த குழந்தைகள் பார்த்து கை கொட்டி சிரித்தனர். பெரிய சத்தத்தை கேட்டு பயந்துபோன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதை தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்த பரிதாபமான கழுதை ஆற்றில் தூக்கி எறியப்பட்டது!. ஏமாற்றம் அடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான். 


 நீதி : எடுப்பார் கை பிள்ளையாகாதே!


கையில் இருப்பதை இழக்காதே!



இன்றைய முக்கிய செய்திகள் 


15-02-2024 


விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்...


தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வாபஸ்...


ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மான உரை...


ஜனநாயக நாட்டில் மக்கள் எந்த மூலைக்கும் செல்ல உரிமை உண்டு; சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி...


ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...



Today's Headlines:

15-02-2024


Farmers' protest is ready for talks with central government: Farmers union president Jagjit Singh... 


8 IAS officers have been transferred - Tamil Nadu government order... 


After meeting with Chief Minister M.K.Stalin, protest of JACTTO GEO organizations was called off...


One country, one election system is completely impractical: Chief Minister M.K.Stalin's resolution speech in the Legislative Assembly... 


In a democracy people have the right to go to any corner; Why did the barricades on the roads? High Court question to the Union Government... 


PM Modi inaugurates UAE's first Hindu temple...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...