கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூ.750 கட்டணத்தில் ஒரே நாளில் அனைத்து 'நவகிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து' சேவை தொடக்கம்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக 'நவகிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து' சேவை வரும் 24ம் தேதி முதல் தொடக்கம்...



சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இப்பேருந்து இயக்கப்படும். 


காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்படும் இப்பேருந்து, நவகிரக கோயில்கள் அனைத்திற்கும் பயணிகளை அழைத்துச் சென்ற பின், மாலை 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்.


இதற்கு பயண கட்டணமாக ₹750 நிர்ணயம். TNSTC செயலியில் முன்பதிவு செய்யலாம்.


ஒரே நாளில் கும்பகோணம், அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சிறப்பு பேருந்து சேவை : அமைச்சர் சிவசங்கர் தகவல்…


ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நமது தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்கப்பட்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் 24.02.2024 முதல் துவங்கப்பட்டு வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட உள்ளது.


இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூன்று நபர் வாடகை கார் மூலம் நவகிரக கோவில்களுக்கும் சென்று வருவதற்கு தோராயமாக குறைந்தது 6,500/- ரூபாய் வாடகையாக மட்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று நபருக்கு ரூபாய் 2250/- மட்டும் இருந்தாலே நவகிரக கோவில்களுக்கு சென்று சிறந்த முறையில் தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்கின்ற செய்தி பயணிகளுக்கு சிறந்த பேருந்து பயணத்திட்டமாக அமைந்துள்ளது. அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக்கொண்டு 

1. காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம்.

2. இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம்.

பின்பு காலை உணவு இடைவேளை 

3. ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9.00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 

4. பின்பு 10.00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம் 

5. பிறகு காலை 11.00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், 

6. காலை 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம்

மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை

7. மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், 

8. மாலை 4.00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், 

9. மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் 

மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு இரவு 8.00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்டவாறு 24.02.2024 முதல் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

www.tnstc.in (Mobile App) Android / I phone மூலமாகவும்” முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி, இப்பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...