கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பேருந்து இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேருந்து இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special Motivation scheme to encourage travelers to make online bookings in government transport corporationbuses

 

 அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு குலுக்கல் திட்டம் 


முதல் பரிசு : இரு சக்கர வாகனம் 

2வது பரிசு : LED SMART TV

3 வது பரிசு : குளிர்சாதனப் பெட்டி


Special Motivation scheme to encourage travelers to make online bookings in government transport corporation buses



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

 

பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும்  உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.



அரசுப் பேருந்துகளில் வாங்க மறந்த சில்லறைகளை இனி UPI மூலம் பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

அரசுப் பேருந்துகளில் வாங்க மறந்த சில்லறைகளை இனி UPI மூலம் பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



ரூ.750 கட்டணத்தில் ஒரே நாளில் அனைத்து 'நவகிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து' சேவை தொடக்கம்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மூலமாக 'நவகிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து' சேவை வரும் 24ம் தேதி முதல் தொடக்கம்...



சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் இப்பேருந்து இயக்கப்படும். 


காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்படும் இப்பேருந்து, நவகிரக கோயில்கள் அனைத்திற்கும் பயணிகளை அழைத்துச் சென்ற பின், மாலை 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்.


இதற்கு பயண கட்டணமாக ₹750 நிர்ணயம். TNSTC செயலியில் முன்பதிவு செய்யலாம்.


ஒரே நாளில் கும்பகோணம், அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சிறப்பு பேருந்து சேவை : அமைச்சர் சிவசங்கர் தகவல்…


ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சிறப்பு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நமது தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்கப்பட்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கம் 24.02.2024 முதல் துவங்கப்பட்டு வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட உள்ளது.


இதற்கு பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மூன்று நபர் வாடகை கார் மூலம் நவகிரக கோவில்களுக்கும் சென்று வருவதற்கு தோராயமாக குறைந்தது 6,500/- ரூபாய் வாடகையாக மட்டும் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் மூன்று நபருக்கு ரூபாய் 2250/- மட்டும் இருந்தாலே நவகிரக கோவில்களுக்கு சென்று சிறந்த முறையில் தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்கின்ற செய்தி பயணிகளுக்கு சிறந்த பேருந்து பயணத்திட்டமாக அமைந்துள்ளது. அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக்கொண்டு 

1. காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம்.

2. இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம்.

பின்பு காலை உணவு இடைவேளை 

3. ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9.00 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 

4. பின்பு 10.00 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம் 

5. பிறகு காலை 11.00 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், 

6. காலை 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம்

மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை

7. மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், 

8. மாலை 4.00 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், 

9. மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம் 

மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு இரவு 8.00 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்து அடையும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்டவாறு 24.02.2024 முதல் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் கீழ்கண்ட இணையதள முகவரியில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

www.tnstc.in (Mobile App) Android / I phone மூலமாகவும்” முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி, இப்பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களில் 3 பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசு - அமைச்சர் சிவசங்கர்...

 


அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களில் 3 பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசு - அமைச்சர் சிவசங்கர்...


 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (01.02.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தளமான https://www.tnstc.in, & etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அது போன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2024 மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனை நடைமுறை படுத்தும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான மூன்று (3) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (01.02.2024) தேர்வு செய்தார், அதன் விவரங்கள் கீழ்வருமாறு, ஜனவரி-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- விரைவில் வழங்கப்படும்.

1. பயண சீட்டு எண்: T50959052, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: ESSAKKI MURUGAN.S, ரொக்கப்பரிசு: ரூ. 10,000

2. பயண சீட்டு எண்: T51210787, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: SEETHA.K, ரொக்கப்பரிசு: ரூ. 10,000

3. பயண சீட்டு எண்: T51655633, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: IMTEYAZ ARIF, ரொக்கப்பரிசு: ரூ. 10,000.



கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (TNSTC Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


கும்பகோணம் மற்றும் திருச்சியிலிருந்து வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (Announcement that 300 special buses will be operated from Kumbakonam and Trichy on the weekends of July 8 and July 9)...


தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 9-ம் தேதி அதிக அளவில் திருமணங்கள் நடைபெற உள்ளதாலும், வார இறுதி நாட்களாக உள்ளதாலும்,


வார இறுதி நாட்களான 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் தஞ்சாவூர்,


பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வேதாரண்யம். திருத்துறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும்,


திருச்சியிலிருந்து கோயமுத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குனர் மோகன் அறிவித்துள்ளார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 01547/ எம்/ இ1/ 2022, நாள்: 19-03-2022 - இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக) [ Preventing unsafe amd footboard travel of school students on government and private buses - Proceedings of the Commissioner of School Education - Attachment: Bus Route of footboard travelling and School Details (District wise)]...



>>> அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 01547/ எம்/ இ1/ 2022, நாள்: 19-03-2022 - இணைப்பு: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் வழித்தடம் மற்றும் பள்ளிகளின் விவரம் (மாவட்ட வாரியாக) [ Preventing unsafe amd footboard travel of school students on government and private buses - Proceedings of the Commissioner of School Education - Attachment: Bus Route of footboard travelling and School Details (District wise)]...

இன்று முதல் பஸ்கள் ஓடும் - மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு...


 தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் வரும் 28ம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், நெல்லை,. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் உள்பட மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்கள் - 50 சதவீத பயணிகள்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கோவிட்-19 தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கனை 28.6.2021 முதல் 05.07,2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.


27 மாவட்டங்களில் பேருந்துகள் - 28ம் தேதி முதல் பேருந்துகள்

ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப்போகுவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில் வரும் 28.06.2021 காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.



எத்தனை பேருந்துகள்  - எங்கு எவ்வளவு..

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 385 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ராஜகண்ணப்பன்  - போக்குவரத்துஅமைச்சர்

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' இவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.



இரவு நேர ஊரடங்கு - திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரையிலிருந்து எந்த ஊருக்கு கடைசி பஸ் எப்பொழுது?



20-04-2021 முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால், திருச்சி மத்திய மற்றும் சத்திரம், திண்டுக்கல், மதுரையிலிருந்து பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊருக்கு கடைசி பஸ்கள் இயக்கம் என்பது குறித்த விவரம்...


>>> கடைசி பஸ்கள் இயக்க நேரம் குறித்த விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...