கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...

 


01.01.2024 அன்றைய நிலவரப்படி வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வுக்கு (BEO Promotion) தகுதியான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



State Level Panel List of Middle School Headmasters Eligible for Promotion to the Post of Block Education Officer as on 01.01.2024 - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu, Rc.No.004797 /I1/2024, Dated. 01.03.2024...



தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6.

ந.க.எண்‌.004797 /ஐ1/2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌ : தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம்‌ - பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ - 2024 ஆம்‌ ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில்‌ தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) தயார்‌ செய்தல்‌ - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும்‌ முழுமையாக தேர்ச்சி பெற்று 3112.2011க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியராக பணியில்‌ சேர்ந்து 31.12.2023 க்குள்‌ முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித்‌ தலைமையாசிரியர்களின்‌ விவரங்களை அனுப்பக்‌ கோருதல்‌ - சார்பு.


பார்வை 1. அரசாணை (நிலை)எண்‌.497, கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பம்‌ துறை, நாள்‌.26.06.95

2. அரசாணை நிலை எண்‌.11 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.09.02.2004


3. அரசாணை நிலை எண்‌.149 , பள்ளிக்‌ கல்வித்‌ (ஜி) துறை, நாள்‌.28.08.2006


4. அரசாணை நிலை எண்‌.107, பணியாளர்‌ மற்றும்‌ நிர்வாகச்‌ சீர்திருத்தத்‌ (எம்‌) துறை, நாள்‌.18.08.2009


5. அரசாணை நிலை எண்‌.242, உயர்‌ கல்வித்‌ (பி) துறை, நாள்‌.18.12.2012.


6. அரசாணை நிலை எண்‌. 165, பள்ளிக்‌ கல்வி பக3(1) துறை நாள்‌.15.10.2014


7. அரசாணை (நிலை) எண்‌:151, பள்ளிக்‌ கல்வி (ப.க.1(1))த்‌ துறை, நாள்‌.09.09.2022


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணியில்‌ வகுப்பு 1 வகை 1 உள்ள வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தினை 50 விழுக்காடு அதே பணியில்‌ வகுப்பு 1 வகை 2 வரும்‌ நடுநிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களை கொண்டு பதவி உயர்வு மூலம்‌ நிரப்ப தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்தை பதவி உயர்வு மூலம்‌ நியமனம்‌ செய்யப்படுவதற்கு 31.12.2011-க்கு முன்னர்‌ நடுநிலைப்பள்ளித்‌ தலைமை ஆசிரியராக பணியில்‌ சேர்ந்து மற்றும்‌ 31.12.2023-க்குள்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுகளிலும்‌ தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்‌ மாநில அளவிலான தகுதிவாய்ந்தோர்‌ பட்டியல்‌ (Panel List) 01.01.2024 அன்றைய நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...