கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...



''சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...''



_*ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.*_ 


_எனவே தான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு._ 


_*மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.*_


_பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான்.._


_*அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசிக் கொண்டே இருந்தான்..*_


_அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.._


_*மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார். ''மன்னர் ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை' மக்களிடம் தங்கக் காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்ன போது..*_


_மன்னன் குறுக்கிட்டுச் சொன்னான்,_


_*''இல்லை இல்லை, எனக்கு ஆண்மகவு*_ _*பிறந்ததற்காக நான் தங்கக் காசு கொடுக்கவில்லை .*_


_எனக்குப் பாடம் நடத்தி என்னைச் சிறந்த மனிதனாக உருவாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும் போது என் மகன் பிறந்து விட்டான்.._


_*அவர் என் மகனை மிகப் பெரும்*_ _*அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கித்*_ _*தருவார் என்ற மகிழ்ச்சியில் தான் இந்தப் பொற்காசுகளை அள்ளித்*_ _*தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளித்*_ _*தூவினான் ..*_


_அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்தவன் தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர்.._



_*ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர்..*_

 

_மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்குப் புகழ் சேர்க்கின்றன._


_*ஆம்..,ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிகச் சிறந்த குடிமகனாக உருவாக்க முடியும்..*_



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...