கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மன அமைதிக்கும், மன நிம்மதிக்கும் சில குறிப்புகள்...



 மன அமைதிக்கும், மன நிம்மதிக்கும் சில குறிப்புகள்...


1 . நம் வாழ்கையில் நடக்கும் பெரும்பான்மையான விசயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


2 . இந்த வாழ்கையில் நாம் ஆசைப்பட்டபடி அனைத்தும் நடப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்


3 . நம் வாழ்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும், துன்பங்களும் நமக்கு பாடமாக வந்தவை மட்டுமே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


4 . நம்மால் இந்த வாழ்கையில் எல்லா விசயங்களையும் மாற்றிவிட முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்


5 . காரண காரியமின்றி நம் வாழ்கையில் எதுவும் நடக்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்


6 . நம் வாழ்கையில் சந்திக்கும் ஒவ்வொரு தொந்தரவுகளும் துன்பங்களும் நம்மை மேன்மைப்படுத்தும். ஒரு நல்ல எதிர்காலத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்


7 . கடந்து போன விசயங்களை மறந்துவிடுங்கள். அவை சென்றுவிட்டவை நம்மால் மாற்ற இயலாதது.


8 . பயம், கவலை, எரிச்சல், கர்வம், பொறாமை, துக்கம், ஏக்கம், போன்ற தீய குணங்களை விட்டுவிடுங்கள்.


9 . ஆசைகளை அளவோடு வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். பேராசைப் படாதீர்கள்.



10 . எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதீர்கள். அவை இன்னும் வரவில்லை அவற்றின் மீது நமக்கு எந்த ஆதிக்கமும் கிடையாது.


11 . கண்முன்னே இருக்கும் வாழ்க்கையை மட்டும் முழுமையாக வாழுங்கள்.


12 . மற்றவரின் வாழ்கையை வாழ ஆசைப்படாதீர்கள். உங்கள் வாழ்கையை வாழ கோடிக்கணக்கான மக்கள் ஏங்கிக் கொண்டிருகிறார்கள்.


13 . நீங்கள் கவலைப் படுவதாலோ, வேதனைப் படுவதாலோ உங்கள் வாழ்கையில் எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...