கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

 தனியார் நிறுவனங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுவே வேலை - கர்நாடக அமைச்சரவையில் மசோதாவுக்கு ஒப்புதல்...


கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...


கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்


அரசு, தனியார் துறைகளில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு 100% கன்னடர்களை நியமிக்கும் வகையில் மசோதா நாளை தாக்கல்...






கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு... முக்கிய அம்சங்கள் என்ன?


இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


கர்நாடகாவில் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில், பிற மாநிலத்தவர் அதிக வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக அம்மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டியலிட உள்ளது.


இடஒதுக்கீடு எவ்வளவு?



கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை பதவிகளில் 75 சதவீதம், அதற்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இடஒதுக்கீடு ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது வேலைக்கு பயன்படுத்தும் குரூப் ‘சி’, குரூப் ‘டி’ தொழிலாளர்கள் கன்னடர்களாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



யார் கன்னடர்கள்?

இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீறினால் என்னவாகும்?

இந்த சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு வரும்வரை அந்த தனியார் நிறுவனம் தினமும் ரூ.100 அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக சி, டி கிரேடு பணிகளில் அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட தேசத்தில் கன்னடர்கள் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, தாயகத்தில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனில் அக்கறை காட்டுவதே எங்கள் முன்னுரிமை.




முதல்வர் சித்தராமையாவின் ட்வீட் (அது இப்போது நீக்கப்பட்டதாகத் தெரிகிறது) குறித்து கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார், "நிர்வாகத்தில் (நிலை) 50% பேருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலாண்மை அல்லாத நிலையில், 70% பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது... அத்தகைய திறன்கள் இல்லை என்றால் , ஆட்களை அவுட்சோர்ஸ் செய்து அவர்களுக்கு இங்கு வேலை கொடுக்கலாம் ஆனால், உள்ளூரில் கிடைக்கும் திறன்களுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது"



“தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.


இது குறித்து வரும் நாட்களில் மறுபரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்”


- கர்நாடக முதல்வர் சித்தராமையா X தளத்தில் பதிவு



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...