கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வானவில்லை முழுமையான வட்டவடிவில் காண முடியுமா?



வானவில்லை முழுமையான வட்டவடிவில் காண முடியுமா?



 முடியும்.


 அதற்கு , ஆகாய விமானத்திலோ[ Aircraft]


உலங்கு ஊர்தியிலோ [ helicopter]


நாம் பயணம் செய்ய வேண்டும்.


விமானிகளும் பயணிகளும் இந்த அரிய நிகழ்வைப் பார்த்து உள்ளார்கள்.


ஆனால் ,அந்த அரிய நிகழ்வைப் பதிவு செய்ய முடியவில்லை.


அதற்கு காரணம் வேகம்; மற்றும் கோண மாறல்கள் என்று கூறுகிறார்கள்.


மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரை வான் காட்சிப் புகைப்படக் கலைஞர் ''Colin Leonhardt'' அவர்கள் பலநாட்கள் முயன்று உலங்கு ஊர்தியில் [ helicopter] சென்று அற்புதமான ,மிகவும் அரிதான முழுமையான வட்டவடிவ வானவில்லை புகைப்படம் எடுத்துள்ளார்.


இந்த 46 வயது புகைப்படக் கலைஞர் சுமார் 50 புகைப்படங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.


இந்த புகைப்படங்களை ''NASA''அங்கீகரித்துள்ளது.


ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு    [ABC - Australian Broadcasting Corporation]

இந்தப் புகைப்படங்களைத் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 


அதுமட்டும் அல்லாது வானவில் தோன்றும் பல வேறுபட்ட இடங்களையும் ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது.


-கடல் அலைகளில் வானவில் தோன்றும்!Rainbows may form in the spray created by waves (called spray bows).


-மஞ்சு தோய்ந்த இடங்களிலும் பெரிய நீர்வீழ்ச்சிகளிலும் வானவில் தோன்றும் !Rainbows can form in mist, such as that of a waterfall.


-மழைப் பொழிவு உள்ள இடத்தில் மட்டும் தோன்றும் அபூர்வ வானவில்.


-தரையில் வானவில் துவங்கும் இடம்.


இவற்றையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.






(Thanks to -Veeramani Veeraswami

ஆஸ்திரேலியா  ஒலிபரப்பு நிறுவனத்தின் அறிவியல் ஆய்வுக்குழு   [ABC - Australian Broadcasting Corporation] இணையம்)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...