டிட்டோஜாக்கின் மாநில அளவிலான டிபிஐ முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - மாநில டிட்டோஜாக் அமைப்பு கல்வித்துறை செயலாளர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் நடந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவு...
💥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் சந்திப்பு - தொடர் முற்றுகைப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்...
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு சார்பில் 29,30,31 ஜூலை 2024 மூன்று நாட்கள் தொடர்முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி மதுமதி அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எழுத்துப்பூர்வமான அழைப்புக்கொடுத்தார். அழைப்பை ஏற்று மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு கண்ணப்பன் அவர்களும், தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு நரேஷ் அவர்களும் உடன் இருந்தனர்.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செயலாளரிடம் கருத்துக்களை பதிவுசெய்யும் பொழுது பொறுமையாகவும் முழுமையாகவும் கேட்டார்.
அரசாணை 243 ஐ ரத்துசெய்யவேண்டும் என்பது உட்பட 31 அம்சக்கோரிக்கைகளையும் அனைத்து உறுப்பினர்களும் விளக்கிக் கூறினர். இன்று காலை 11.00 am to மதியம் 1.00 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை முடிவில் கல்வித்துறை செயலாளர் கூறுகையில் நான் பதவியேற்று ஒருசில நாட்களே ஆனதால் கோரிக்கைகளை மிகவிரைவில் பரிசீலித்து நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
💥டிட்டோஜாக் முடிவு:
🔥பேச்சுவார்த்தைக்குப்பின் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்திற்குள் உள்ள தமிழக தலைமைச்செயலக சங்க அலுவலகத்தில் கூடி விவாதித்தபின் "திட்டமிட்டபடி 29,30,31 ஜூலை 2024 முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.