கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% GST - தற்காலிகமாக ஒத்திவைப்பு...



 ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி - தற்காலிகமாக ஒத்திவைப்பு...


டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது.


இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.


இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...