கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Students who had bit in Exam - Teacher reprimanded - 4 girls drink poison...



தேர்வில் பிட் அடித்த மாணவிகள் - ஆசிரியர் கண்டிப்பு - 4 மாணவிகள் விசம் குடிப்பு...


பள்ளித்தேர்வில் பிட் அடித்து கொசு மருந்து குடித்த மாணவிகள் - நடந்தது என்ன?


 கோவில்பட்டி அருகே தேர்வில் பார்த்து எழுதியதை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்து கொசு மருந்து லிக்யூட் குடித்ததால் நான்கு மாணவிகள் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அய்யனேரி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 90 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் தலைமை ஆசிரியர் கூட நான்கு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.


21-09-2024 அன்று காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதியுள்ளனர். இதில் சில மாணவ மாணவிகள் பிட் அடித்து தேர்வு எழுதியதாக கூறி ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் எட்டாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அய்யனேரி பஸ் ஸ்டாப் அருகே உள்ள மெடிக்கல் கொசு மருந்து வாங்கி குடித்ததாக தெரிகிறது. சற்று நேரத்தில் தலைசுற்றல் ஏற்படவே பயந்த மாணவி ஒருவர் தனது தாயிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.


இதையடுத்து கொசு மருந்து குடித்த நான்கு மாணவிகளும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...