கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Constitution of Union of India

 




இந்திய ஒன்றியத்தின் 75வது அரசமைப்புச் சட்ட தின வாழ்த்துகள்


Happy 75th Constitution Day of Union of India


இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட டாக்டர்.அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும், மேலும் இந்திய அரசமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும், அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யபட்டு அரசியல் நிர்ணய சபையின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்ற நாளான நவம்பர் 26-ஐ அரசமைப்புச் சட்ட தினமாகக் கொண்டாட இந்திய ஒன்றிய அரசால் 2015-ஆம் ஆண்டு அறிவித்தது.


பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்தே 1934-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிறகு 1936 & 1939-ல் இருமுறை இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


அதன்படி, 1942-ஆம் ஆண்டு மார்ச்சில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபையை உருவாக்கப் பரிந்துரைத்தது. அதன்பின்பு 1946 மே-இல் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. 11.12.1946-ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.


பிரித்தானியாவின் ஆளுகையின் கீழிருந்த இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் 1947-ல் விடுதலை பெற்ற போது இந்தியா & பாக்கிஸ்தான் என்று இருவேறு பிராந்தியங்களாகப் பிரிந்ததால் சுதந்திர இந்தியப் பிராந்தியத்தின் அரசியலமைப்புச் சாசனத்தை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்திய நாட்டிற்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று இந்திய அரசமைப்பு நிர்ணய சபையால் தொடங்கப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ.இரா.அம்பேத்கர் தலைமையில் ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.


இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று, 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தால் கையொப்பம் இடப்பட்டது.


இந்த அரசமைப்புச் சட்டமே 'இந்தியா' என்ற நாட்டை 'சமயச்சார்பற்ற இந்திய ஒன்றியம்' என்று வரையறுத்தது. பிரித்தானிய ஆளுகையின்கீழ் இருந்து விடுதலையான 500-க்கும் மேற்பட்ட தனி மன்னராட்சி நாடுகளை அதன்பின் ஒன்றிணைக்கப்பட்டு  தற்போதைய இந்திய ஒன்றியம் உருவானது. 


மேலும், இச்சட்டமானது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கி, இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதிலேயே மிக நீண்ட அரசமைப்புச் சட்ட்டமாக உள்ளது.


இன்று இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழி பெயர்ப்பினையும் கொண்டுள்ளது.


உரிமைகளை உணர்வோம்!

கடமைதனைத் தவறோம்!!


நன்றி : விக்கி & கவுன்டர்வ்யூ


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்  Donation of property can be canceled if chi...