கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

INCOME TAX 2024-2025 பிடித்தம் குறித்த தகவல்கள்

 

 

INCOME TAX 2024-2025 பிடித்தம் குறித்த தகவல்கள்


வருமான வரி பிடித்தம் பிரதி மாதம்  பிடித்தம் செய்யப்பட்ட தொகையை *IFHRMS மூலம் PAY SLIP DOWNLOAD* செய்து


 வருமான வரி கணக்கீட்டு படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தொகையை அறிந்து மீதமுள்ள மாதத்திற்கு எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திட வேண்டுகிறோம்


தேவைப்பட்டால்,


*டிசம்பர் மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்து அதற்கான COVERING LETTER ம் வைத்து அலுவலகத்திற்கு அனுப்பிடலாம்*


வருமான வரித் தொகை பிடித்தம் போதுமானதாக இருந்தால் மாற்றம் தேவையில்லை....


ரூ.10,00,000 லட்சத்திற்குள் ஊதியம் பெறுபவர்களுக்கு *பழைய முறையும்* 


10,00,000 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு *புதிய வருமான வரி முறையும்  பயனுள்ளதாக இருக்கும்*



*புதிய வரி முறையில்*


*ரூ.75,000* ரூ நிரந்தரக் கழிவு

(சென்ற வருடம் ரூ.50,000 ஆக இருந்தது)


முதல் 3,00,000க்கு NIL


3,00,000 - 7,00,000 --- 5%


(*சென்ற  ஆண்டில் 6 லட்சம் வரை இருந்தது தற்போது 1 லட்சம் கூடுதலாக்கப்பட்டுள்ளது*)


7,00,000 - 10,00,000 ----- 10%


10,00,000 - 12,00,000 ----15%


12,00,000 - 15,00,000 ----20%


15 லட்சத்திற்கு மேல் -30%



இனி வரும் மாதங்களில் வருமான வரி பிடித்தத்தை சரி செய்து கூடுதலாக பிடித்தம் செய்வதை தவிர்த்திடலாம்...


*டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி 3 மாதங்களில் எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை  நாம் கணக்கீடு செய்தால் மட்டுமே உறுதி செய்யலாம்*


கவனத்திற்காக,


*IFHRMS ல் தானாகவே கணக்கீடு செய்வதால் நமது வருமான வரி தொகை முடிவடைந்தவுடன்  பிடித்தத்தை நிறுத்திடவும் வாய்ப்பு உண்டு என தகவல் இருந்தாலும் நிறைய பேருக்கு ஏற்கனவே பிடித்தம் செய்த தொகையே அதிகமாக உள்ளது*


இருப்பினும் 


நாம் முன் எச்சரிக்கையாக இருப்பது பின்னர்  கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை *REFUND* வாங்கிட தேவை இருக்காது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Half yearly examinations - Today's (December 12) Exam is postponed in 16 districts due to heavy rains - Director of School Education Kannappan

 கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை ...