கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kanyakumari Thiruvalluvar Statue - Amazing Facts



கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - வியப்பூட்டும் தகவல்கள்


Kanyakumari Thiruvalluvar Idol - Amazing Information 


 கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை கட்டிமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டி இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு வெள்ளிவிழாவைக் கொண்டாட முடிவு செய்துள்ளது.


இன்றைக்கு கட்டுமான துறை பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுவிட்டது. கடல் நடுவே அல்ல கடலுக்கு உள்ளேயே ஒரு நகரத்தை உருவாக்கிவிட முடியும்


ஆனால், 25 ஆண்டுகள் முன்னால் ஜேசிபி, பொக்லைன் எந்திரங்கள் போன்ற நவீன எந்திரங்களின் உதவியே இல்லாமல் 133 அடிக்குக் கன்னியாகுமரி கடல் நடுவே வள்ளுவருக்குச் சிலை வடிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. 1990இல் தொடங்கிய இந்தச் சிலை அமைக்கும் பணி 1999 வரை நடைபெற்று 2000 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அன்றைய மதிப்பில் இதற்காக மொத்த பட்ஜெட் 6.14 கோடி. ஒரு நாளைக்கு 150 தொழிலாளர்கள் சேர்ந்து 16 மணிநேரம் இதன் கட்டுமான பணியை மேற்கொண்டார்கள் என்றால் சும்மாவா?


அப்படி இரவு பகலாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்போது25 வயது. ஆகவே அதற்கான வெள்ளி விழாவை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதனை அந்தக் காலத்தில் புகழ்பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதிதான் செய்தார். அவருடன் சிலை வடிவமைப்பில் உதவிக்கரமாக இருந்த செல்வநாதன் பல நினைவுகளை அசை போட்டு பேசி இருக்கிறார். அவர், "கணபதி ஸ்தபதியுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழக்கம்.



ஸ்தபதி முதன்முதலில் மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கல்லூரிக்கு முதல்வராக இருந்தார். அப்போது சிலப்பதிகாரத்திற்கு உருவம் கொடுக்க கருணாநிதி முயற்சி எடுத்தார். பூம்புகாரில் கோட்டம் அமைத்தார். அதைக் கணபதியை வைத்துத்தான் கட்டி எழுப்பினர். அதன்பிறகு 1970களுக்குப் பின்னால் வள்ளுவர் கோட்டத்தை இதே சிற்பியின் துணையைக் கொண்டுதான் உருவாக்கினார்.


அதன் தொடர்ச்சியாகத்தான் 1990இல் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பாறை மீது வள்ளுவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு உருவானது. ஆனால், அவ்வளவு பெரிய கருங்கல் சிலையை அங்கே உருவாக்க முடியுமா? அதற்கான கற்களைக் கொண்டு போக வாய்ப்பு இருக்கிறதா? எத்தனை அடி உயரத்தில் செய்ய முடியும்? அந்தப் பாறை தாக்குமா? என பல சந்தேகங்கள் அவர் மனதிலிருந்தது. அதை பற்றி அறிந்து கொள்ளக் கணபதி ஸ்தபதியை அழைத்து அவர் பேசினார். நானும் அப்போது உடன் இருந்தேன்.


அந்தச் சந்திப்பு முடிந்த உடனேயே ஒருநாள் காலை 5 மணிக்கு ஸ்தபதி வீட்டுக்குக் கருணாநிதி போன் செய்தார். 133 அடி உயரத்தில் சிலையை அமைக்க விரும்புவதாகச் சொன்னார். அது முடியுமா? என்று கேட்டார். உடனே கணபதி ஸ்தபதி, நான் அதைச்செய்து முடிக்கிறேன் என்றார். அன்றே உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார்.


அந்தச் சிலை மட்டுமே 95 அடி உயரம். அதற்குக் கற்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரே அளவிலான கற்கள் இல்லை. பல வடிவங்களில் கற்கள் தேவை. சிலை அமைந்துள்ள பீடம் என்பது 13 அடுக்குகளாகக் கட்டினோம். சிலை 21 அடுக்குகளைக் கொண்டது. அதற்காக வரைபடத்தை கையால் வரைந்தார். அன்று கம்ப்யூட்டர் வசதியே இல்லை. ஜேசிபி, பொக்லைன் போன்ற நவீன உபகரண வசதிகள் அன்று கிடையாது. சாதாரண சவுக்கு மற்றும் பனை மரங்களை வைத்துத்தான் சாரம் கட்டினோம். வெறும் உளி, சுத்தியல் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்திச் செய்தது மிகப்பெரிய சவால்.


சிலை அமைந்துள்ள ஆதார பீடத்தைக் கன்னியாகுமரியிலேயே செய்தோம். சுற்றுச் சுவர் செய்வதற்காக அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து கற்களை எடுத்து வந்தோம். வள்ளுவர் சிலையைச் சென்னையில்தான் செய்தோம். வாலாஜாபாத் பக்கம் சிறுதாமூரில் இருந்து கற்களை எடுத்து வந்தோம். இந்தக் கற்கள் ஒவ்வொன்றும் 3 முதல் 8 டன் எடை கொண்டவை.



இந்தக் கற்களை கன்னியாகுமரி பாறைக்குச் சின்ன படகுகள் மூலம் கொண்டு சென்றோம். செயின் புள்ளிங் மூலம் சிறுக சிறுக கற்களைக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தினோம். குமரி முனையிலிருந்த பாறையின் அளவு வெறும் 2400 சதுர அடிதான். மிகச் சிறிய இடம். அதில் 7 ஆயிரம் டன் எடை கொண்ட சிலையை நிறுவுவது என்பது மெகா சாதனை. மொத்தம் 3681 கருங்கற்களைக் கொண்டு கட்டினோம்.


இவ்வளவு எடையை அந்தப் பாறை தாங்குமா? என யோசித்துப் பார்த்தோம். அதற்காக துளையிட்டு அளந்தோம். பாறை கடல் ஆழத்தில் 200 அடி வரை இருந்ததைக் கண்டுபிடித்தோம். பின்னர் அனுமதி பெற்று பாறையைச் சமன்படுத்திக் கட்டினோம். வள்ளுவர் உடல் பகுதியை விடச் சவாலானது தலை பகுதிதான். தலை மட்டுமே 20அடி. கடல் சீற்றம், புயல் போன்ற காலங்களில் அடிக்கும் காற்றின் வேகத்தால் தலை தனியே விழ வாய்ப்பு உண்டு. புயல் காற்று அடித்தாலும் அதைத் தாங்கும்படி கணக்கிட்டு வலிமையாக அதை வடிவமைத்தார் கணபதி ஸ்தபதி. அதனால்தான் 2004 மிகப்பெரிய சுனாமி தாக்குதல் வந்த போது ராட்சச அலைகள் சிலையைத் தாக்கியது. அதைத் தாங்கி நின்றார் வள்ளுவர். சிலை எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை அன்றைக்கு உலகமே உணர்ந்தது.


திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.


சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நடுக்கடலில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த 1996-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையைஅப்போதைய முதல்அமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார்.


கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 7000 டன் எடை கொண்ட இந்த சிலை 3681 மிகப்பெரிய கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் கணபதி ஸ்தபதி இந்த சிலையை செதுக்கி நிறுவினார்.


திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலை குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலை 150 சிற்பக்கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டுகள் தொடர் உழைப்பின் மூலம் உருவானது.


சிலையின் அமைப்பு பணியையும் முன்னேற்றத்தையும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தினம் தினம் கவனித்து அவரது தனிப்பட்ட மேற்பார்வையில் சிலை அமைக்கும் பணி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு ரூ.6 கோடியே 11 லட்சம்செலவில் இந்தசிலை நிர்மாணிக்கப்பட்டது.


இவ்வளவு பெரிய கல்லால் ஆன சிலை உலகிலேயே வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலையை வடிவமைத்த டாக்டர் கணபதி ஸ்தபதி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சிலையை சீரமைத்து, ரசாயன கலவை பூச வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்படி கடந்த 2000-ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த சிலை 2004, 2008, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்கப்பட்டு ரசாயன கலவை பூசப்பட்டது. இதற்காக ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த ரசாயன கலவை இறக்குமதி செய்யப்படும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...