கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Fulfillment of 389 / 505 Promises - Chief Minister's Announcement

 



389 / 505 வாக்குறுதிகள் நிறைவேற்றம் - முதலமைச்சர் அறிவிப்பு 


'505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 


சிவகங்கையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.


பின்னர் அவர் விழா மேடையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு. சிவகங்கையில் புதிய நகராட்சி கட்டிடம்; மகளிர் கல்லூரி அமைக்கப்படுகிறது. அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 89 கோடியில் புதிய கட்டிடம் உள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு 30 கோடியில் புதிய கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் குடும்பத்திலும் தந்தையாக, அண்ணனாக, மகனாக நான் இருக்கிறேன்.


திமுக தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 505. அந்த 505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மிச்சம் இருப்பது 116. மிச்சம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு மூன்று திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தான் பாக்கி இருக்கிறது. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் ஏற்றுக்கொள்கிறோம். இதை தெரிந்தும் தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். இன்னொரு கட்சித் தலைவர் அறிக்கையை காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது இபிஎஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இபிஎஸ் புலம்பிக் கொண்டிருக்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியுமா?'' என்றார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Classical Day Festival - Essay and speech competition for students

செம்மொழி நாள் விழா - மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி Classical Day Festival - Essay and speech competition for students செம்மொழி நாள்...