கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

OBC Certificate Related Information


இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC சான்றிதழ் குறித்த தகவல்கள்


 Other Backward Classes Certificate Related Information 



>>> OBC சான்றிதழ் குறித்த அரசாணைகள், அரசுக் கடிதங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நண்பர்களே வணக்கம் 🙏  


OBC சான்றிதழ் குறித்த பதிவு இது...


1) மாநில அரசில் சாதி சான்றிதழ் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது


2) மத்திய அரசில் OBC Certificate பிறப்பு மற்றும் " *பொருளாதார* " நிலை அடிப்படையில் வழங்கப்படுகின்றது .


3) பெரும்பாலான நமது BC/MBC/DNC பிரிவுகள் OBC list இல் உள்ளன..

வெகு சில BC சாதிகள் OBC பட்டியலில் இல்லை.


4) OBC Creamy Layer ( வளமான பிரிவினர்) 

OBC Non Creamy Layer ( வளமான பிரிவில் அல்லாதோர்).. இரண்டு வகைகள் உள்ளன


5) OBC Non creamy layer தான் பயன் தரக் கூடியது..  ( OBC Creamy Layer certificate - General category போல தான்)


6) OBC ( NCL ) பெற பொருளாதார நிலை கருத்தில் கொள்ளப்படுகிறது ..

பெற்றோர் ஆண்டு வருமானம் 8 lakhs மிகாமல் இருக்க வேண்டும்..


இந்த *பதிவின் நோக்கம்* இது தான்... இதை தெளிவு படுத்த தான் இந்த நீண்ட நெடிய பதிவு 😊


7) அந்த 8 இலட்சம் என்பது நமது ஊதியம் மற்றும் விவசாய வருமானம் ( இருப்பின்) 

நீங்கலாக பெறக்கூடிய " *இதர வருமானம்* " ..

மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்...


8) நமது மாத ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை...

பெற்றோர் ஆண்டு வருமானம் (ஊதியம்) 8 L க்கு மேல் இருந்தாலும் OBC Non creamy layer certificate வாங்கலாம்.


இது "நிரந்தர சான்றிதழ்" கிடையாது... சான்றிதழ் பெறப்பட்ட நிதியாண்டில் மட்டுமே செல்லத்தக்கது..

1/4 முதல் 31/3 வரை...

( உ.ம் இப்போது பெறப்படும் சான்றிதழ் validity 31/3/2025 வரை மட்டுமே)

1/4/25 க்கு பிறகு பெறப்பட்டது எனில் அது 31/3/26 வரை செல்லத்தக்கது) ..


அதே போல அந்த நிதியாண்டில் தங்களின் " இதர வருமானம்" 8L க்கு மிகும் போது (பொதுவாக இருக்காது) சான்றிதழ் தானாக ரத்து ஆகிறது.. 



9) மேலும் சில நிபந்தனைகளை உள்ளன... அவைகளில் சில...


a) பெற்றோரில் ஒருவர் நேரடி Group A officer எனில் கிடையாது


b) பெற்றோர் இருவரும் நேரடி Group B நியமனம் எனில் கிடையாது..


நமக்கு...  (ஆசிரியர்கள் - BT/PG/HM (HS), HM (HSS) எல்லாம் Group B service தான்).


அம்மா அப்பா இருவரும் Direct PG/BT எனில் கிடைக்காது..


ஒருவர் Direct PG/BT  மற்றொருவர் அரசு பணியில் இல்லை அல்லது Group C & D நியமனம்.. ஆனால் பதவி உயர்வு மூலம் தற்போது group B எனில். OBC (NCL) உண்டு..


c) தற்போது தந்தை தாய் இருவரும் BT/PG/HM  என்ற காரணத்தால் நிராகரிக்க கூடாது.. 

ஒருவேளை அவர்களில் ஒருவர் SGT நியமனம் பதவி உயர்வு மூலம் BT/PG/HM  எனில் OBC NCL தகுதி உண்டு... 


10) மத்திய அரசிற்கு தான் OBC certificate என்றாலும் அதை வழங்குவது நமது மாநில VAO/RI/ DT/ Tahsildar.. எனவே தங்களின்/அவர்களின் புரிதலுக்காக கிடைக்கப் பெற்ற தகவல் அரசாணை தொகுத்து உள்ளேன்..


நமது பள்ளி குழந்தைகள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர OBC NCL தேவைப்படலாம் அதே போல் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குழந்தைகள் கல்வி/வேலைவாய்ப்பு பெற OBC NCL certificate தேவைப்படலாம்... என்ற நோக்கில் 😊


தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏



>>> OBC சான்றிதழ் குறித்த அரசாணைகள், அரசுக் கடிதங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

  47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு 47,013 te...