அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்
02.01.2025 அன்று பள்ளிகள் திறந்தவுடன் மூன்றாம் பருவத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய பணிகள்
1.பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. வகுப்பறைகள் அனைத்தும் நேரடியாக பார்வையிட்டு மாணவ மாணவிகள் அனைவரும் பாதுகாப்புடன் அமர்ந்து படிக்க உகந்ததாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
3. இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகங்கள் வழங்கிட வேண்டும். உரிய பதிவேட்டில் முறையாக பதிந்து பராமரித்திட வேண்டும்.
4 .ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவ மாணவிகளின் வருகை பதிவுகளை App-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
5. முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவத்திற்கு வழங்கப்பட்ட விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் இதர நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தை TNSED App-ல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிபடுத்த வேண்டும்.
6. மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கு பெறும் மாணவ மாணவிகளை தயார் படுத்தி உரிய நேரத்தில் கலந்துகொள்ள உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
7. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் சார்ந்த verification - ஐ தினந்தோறும் பார்த்து update செய்தல் வேண்டும்.
8. இன்டர்நெட் கனெக்சன் சார்ந்த OTC, Monthly Charges receipts ஐ upload செய்ய வேண்டும்.
9. ஜனவரி 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் சார்ந்த மூன்றாம் பருவ பயிற்சிகளில் அவர்களுக்கு உரிய நாட்களில் தவறாமல் பங்கு பெறுதல் வேண்டும்.
10. மாணவ மாணவிகளின் ஹெல்த் செக்கப் முடிக்காத பள்ளிகள் இப்பணியை முழுமையாக முடித்திருக்க வேண்டும்.
11. 6, 7 ,8 வகுப்புகளின் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS-இல் அப்லோடு செய்திருக்க வேண்டும்.
12. SMC புதிய உறுப்பினர்கள் அனைவரையும் EMIS-இல் முழுமையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
13. *UDISE+* சார்ந்த பதிவுகளை முழுமையாக நிறைவு செய்து இருக்க வேண்டும்.
14. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த பணிகளை ITK தன்னார்வலர் மற்றும் BRTE யுடன் இணைந்து செயல்படுத்திட வேண்டும்.
15. அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் சரளமாக வாசிப்பதையும் எழுதுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.
- வட்டாரக் கல்வி அலுவலர்கள்